திங்கள், 24 ஜனவரி, 2011

பெண்ணாசை விலக்கல்...

பாம்பாட்டி சித்தரின் நோக்கில் ....
சித்தர்கள் என்றும் பெண்களுக்கு எதிரானவர்கள் அல்ல . அவர்கள் எல்லா பெண்களையும் தம் தாயாகவே கருதுவார்கள். இங்கு கூறப்படும் பாடல்களில் உள்ளவை பெண்மேல் மோகம் கொண்டு திரியும் காமுகர்களுக்காக  கூறபடுபவை.
சித்தர்களின் உள்ளங்கவர்ந்த நாயகியே வாலைப்பெண்(பராசக்தி)  தான் . அப்படி இருக்க எப்படி அவர்கள் பெண்களை தவறாக கூறுவார்கள். சித்தர்களின் இலக்கண விதிப்படி உள்ளொன்று வைத்து புறமொன்று கூறுவார்கள் .

வெயில்கண்ட மஞ்சள்  போன்ற மாத ரழகை
விரும்பியே மேல்விழுந்த  மேவு மாந்தர்
ஒயில் கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
உடல்போனால் ஒடுவாரென்று ஆடாய் பாம்பே .

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

4 கருத்துகள்:

  1. நனறாக சொன்னீர்கள்.. சித்தர்கள் என்றாலே பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற க்ருத்து சமூகத்தில் உள்ளது...

    இதை மாற்ற இதைத் தூண்டும் பாடல்களுக்கு சரியான விளக்கம் தேவை.. இதற்கு மட்டுமல்ல பெரும்பாலான சித்தர் பாடல்கள் மறை பொருளாகவே உள்ளன... இவற்றிற்கு சரியான விளக்கங்கள் தரும் பதிவுகள் இட்டால் நலம்...

    நன்றி.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள சங்கர் குருசாமி,

    தங்களின் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சித்தர்களின் பாடல்களில் உள்ள பரிபாஷைகளுக்கு விளக்கம் தருவது என்பது சாதாரண விஷயம் இல்லை ,இருப்பினும் அவர்களின் ஆசியினால் கூடிய விரைவில் விளக்கம் தருகிறேன்.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  3. இதற்கென்று பயிற்சி முறைகள் உள்ளது- http://vethathiri.edu.in/. இன்னும் அழமான பயிற்சிகள் அமைதியாக நடைபெறுகிறது -http://www.thamirabaranyashram.org/.

    பதிலளிநீக்கு