சித்தர்கள் பொதுவாக பொய் வேடமிட்டு திரியும் மாக்களை நன்றாக வசை
பாடுவார்கள் .இந்த உலகில் உயிர் வாழ வேண்டும் அதற்க்கு அன்னம் வேண்டும்.அன்னத்திற்கு வேண்டி ஒருவன் தவசியானால் அவன் நிலையைப்பற்றி.
எனக்கு பிடித்த பாடலில் ஒன்று..
பாடல்:
சோருக்கோ அருசுவைக்கோ துணிக்கித் தானோ
சுகம்வேண்டி யிவ்வளவுங் கையையேந்தி
நீருக்கோ ஓடேந்தி வாசல்நின்று
நிமிர்ந்தாக்கால் நீரிடார் தலைகவிழ்ந்தே
பாருக்கோ பாதமதைப் பார்த்தேநின்று
பரிவாசி காணாமற் கூசிநின்று
மோருக்கோ நின்றிரு ப்பீர் வாசல்தோறும்
மொய்குழலா ரிட்டஅன்னம் வீடுதானே ....
விளக்கம் :
பொதுவாக பிச்சை எடுப்பது சாதாரண விஷயம் இல்லை . பலரின் ஏச்சுகலுக்கு இடையில் தான் வாழ முடியும். இப்படி பட்ட வாழ்க்கை நமக்கு தேவையா ?
தேவை என்றால் அதை அனுபவித்து வாழ வேண்டும்.
எல்லா சித்தர்களும் திருமணம் புரிந்து கொண்டு இல்லறத்தில் இருந்து கொண்டு துறவறத்தை மேற்கொண்டவர்கள் . எமது குரு முனியும் கூட தான்.
யாரும் இதற்க்கு விதி விளக்கல்ல .
பிச்சை எடுத்தவர்களில் பல சித்தர்களுண்டு ஏன் அந்த ஆதி சித்தனும் உண்டு.
அன்னமய கோசத்திற்கு தான் அன்னம் தேவை ஆனந்தமய கோசத்திற்கு இல்லை . மேற்கண்ட பாடல் அருமையான விளக்கத்தோடு உள்ளது
பிச்சை எடுப்பதும் அதில் கிடைத்தால் சந்தோசம் இல்லையென்றால் தலை கவிழ்ந்து அசிங்கம் ஏற்படும் போன்ற கருத்துகள் உள்ளது.
வாசியைப்பார்த்து வந்தால் அன்னம் தேவை இல்லை ,ஆனந்தம் அங்கு தாண்டவமாடும் . உயிருக்கும் உடலுக்கும் தேவையான அனைத்து சத்துகளும் வாசியின் மூலம் பெறமுடியும்.
"வாசியை கவனித்தால் காசி போக தேவையில்லை"
வாசியை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் குருவருளால்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.