செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அழுகணிச் சித்தரின் பாடலில் வாசியைபற்றி...

 வாசியைபற்றி :

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்ட கையிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திருக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
ஆண்டி ருந்தாலாகாதோ ......

 விளக்கம் :
பொதுவாக நாம் சுவாசிக்கும் மூச்சானது உள்ளே செல்லும்போது 16  அங்குலமாக செல்கிறது. அது வெளியே வரும்போது 12  அங்குலமாக தான் வருகிறது.  ஆகையால் நம் உடலில் தங்குவது 4  அங்குலம் உள்ள சுவாசம் தான். இவ்வாறு விரயமாகும் மூச்சினை முறையாக செலவழித்தால் நீண்ட ஆயுட்காலம் வாழ முடியும் என்பது தான் இப்பாடலின் கருத்து.


புரவி   : சுவாசம்
யீராறு:  2 * 6  = 12 
கட்ட கையிறெடுத்துக்: சரம் பார்த்தல் (வாசி பயிற்சி)
"சரத்தை பார்ப்பவன் பரத்தை பார்பான்"

கால்நாலுஞ்:(4 +4+4 +4 = 16  )
அட்டாள தேசமெல்லாம்: (அட்டமா சித்திகள்(8 ) )

உள்ளே செல்லும் மூச்சினை வெளியே விடாமல் உள்ளே சுவாசிக்கும் முறைக்கு தான் வாசி என்று பெயர். 
இந்த பயிற்சியின் மூலம் சுவாசம் வெளிவருவதில்லை .ஆகையால் சித்தர்கள் நீண்ட ஆயுட்காலம்(இன்றும்) உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். (வாசி = சிவா ). இந்த பயிற்சின் மூலம் அவர்கள் அட்டமா சித்திகள் என்னும் அபூர்வ வகையான சக்திகள் கொண்டு உலகமெங்கும் வாழும் மக்களுக்காக தொண்டு புரிந்து வருகிறார்கள்.

"சித்தர்கள் மக்களுக்காக என்றும் வாழும் மகத்தானவர்கள்."

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக