புதன், 9 பிப்ரவரி, 2011

வால்மீகர் சித்தரின் பாடலில் இருந்து..

இங்கு கூறப்படும் பாடலுக்கு விளக்கம் தெளிவாகவே பாடலிலே உள்ளது. இருப்பினும் எனக்கு தெரிந்த விளக்கத்தை கொடுத்துள்ளேன் .

வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்
    வானில் வரும் ரவிமதியும் வாசி யாகும்
சிந்தைதெளிந் திருப்பவனா இவனே சித்தன்
    செகமெல்லாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்
 நந்திஎன்ற வாகனமே தூல தேகம்
    நான்முகனே  கண் மூக்குச் செவிநாக் காகும்
 தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்
    தந்தைதாய் ரவிமதி என்று அறிந்துகொள்ளே...

விளக்கம் :
வாசி       : மூச்சு பயிற்சி
                  தினந்தோறும் சூரியனும் , சந்திரனும் மாறி மாறிவந்து தங்களுடைய கடமையை செய்கிறது . அதுபோல் தான் மூச்சு காற்றும் தினம் தினம் வந்து போகிறது. எப்படி இதற்க்கு அழிவில்லையோ அதுபோல் தான் இந்த உடம்பும்.
புரிந்த கொள்ளுங்கள் எப்படி நம்ம உடம்பை அழியாமல் பாதுகாத்துக்கொள்ள .
பிரம்மா : கண் , மூக்கு, செவி, நாக்கு .(நான்கு முகம் )
நந்தி        : தூல தேகம் (உடல்) (சிவன் சன்னதியில் உள்ள நந்தி )
                 நந்தி எப்படி சிவசக்தியை சுமந்து கொண்டு செல்கிறதோ , அதுபோல் இந்த உடலானது சிவன் என்ற சீவனையும் சக்தி என்ற பிராணனையும் சுமந்து செல்கிறது .
தந்திமுகன் : பிராணன் (மூச்சு காற்று )                      
பெற்றோர்கள் : தந்தை :ரவி ,(சிவனின் இரு கண்கள் )
                             தாய் :மதி .
"சிவனை தன்னுடலில் காணும் யாவருமே சித்தன் ஆவார்கள்"
சித்தர்கள் இயற்கையை(எல்லா உயிரனங்களையும் ) தெய்வங்களாக வணங்கினார்கள் . அதனையே தங்களுடைய உடலிலும்(ஆதாரங்களில் ) அனுபவித்து கண்டார்கள். அவர்கள் ஒருபோதும் சிலை வழிப்பாட்டினை ஆதரித்ததாக எப்பாடலிலும் காணமுடியவில்லை.  அவர்களுடைய் கருத்துக்களை வரும் நாட்களில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதன் மூலம் நான் தெய்வ வழிப்பாட்டினை குறை கூறவில்லை .அதற்க்கு மேலும் ஒரு உலகம் உள்ளது அதனை புரிந்து கொள்ள முயற்சி  செய்யுங்கள் என்று கூறுகிறேன்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

5 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பா ,
    "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
    சித்தர் பாடல் கருத்துகளில்,மிக அருமையான கருத்தை உலகிற்கு வெளிப்படுத்தியதற்கு நன்றி...
    தங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
    என்றும்..நட்புடன்
    chakra....
    http://shivasiddhargal.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. Bala, Very Nice Poem... Thanks for sharing scuh valuable info.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள சங்கர் குருசாமி ,

    தங்களின் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி .

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  4. நண்பா சக்ரா,

    உன்னுடைய ஊக்கமே என்னுடைய வளர்ச்சிக்கு அடித்தளம்.. சித்தர்களின் தொடர்பில் உள்ள நீயும் உன் படைப்புகளும் கூடிய விரைவில் அனைவருக்கும் கிடைக்க முயற்சி செய் .

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் பணி தொடர மனமார்ந்த ஆன்ம வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு