புதன், 2 பிப்ரவரி, 2011

சிவவாக்கியரின் பாடல்களில் சமுதாய நோக்கங்கள்

சித்தர்களின் பாடல்களில் உள்ள தத்துவங்களை மக்களிடம் கொண்டு செல்வதே எனது குறிக்கோள்.
 கீழ்காணும் பாடலில் உள்ள விளக்கத்தை புரிந்து கொண்டால் போதும் . அடுத்தவர்க்கு சொந்தமான எந்த(பெண்) ஒரு பொருளையும் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது.
 
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லேலும்பினு மிலக்கமிட்  டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும்  பகுத்துபாரு மும்முளே.

இப்பாடலை மேற்படியாக படித்து பார்த்தாலே விளக்கம் தெரியும். நான் ஒன்று மட்டும் சொல்லவிரும்புகிறேன்.

" போகம் என்பது மனத்தால் வருவது, பணத்தால் வருவது அல்ல" .
"மோகம் என்பது உணர்ச்சியால் வருவது, உண்மையால் வருவது அல்ல".
"இன்பம் என்பது இயற்கையால் வருவது ,இயலாமையால் வருவது அல்ல ".
எல்லா இன்பமும் உன்னுள்ளே தான் இருக்கிறது, அதை நீ உணர்ந்தாலே போதும்.

மனித சாதியினால் வேறுப்பட்ட இரு மங்கைகள் தரும் சுகம் ஒன்றே ஆனால் அந்த சுகத்தை உணர்வது  நீ தான்(உடலால் ,உள்ளத்தால் ,மனத்தால்).

"சாதி வெறி வேண்டாம் நம்ம சித்தர் இனத்திலே"

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

3 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பா ,
  "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"

  தங்களின் பதிவு அருமை , மற்றும் தங்களின் பதிவில் ,
  எனது பார்வையில் 1 ." போகம் என்பது மனத்தால் வருவது,உண்மை ஆனால் பணம் தான் மனதை நிறைவு செய்கிறது. மனம் நிறைவு பட்டால்தான் போகம் தோன்றுகிறது.
  2 . "மோகம் என்பது உணர்ச்சியால் வருவது, உண்மையால் வருவது அல்ல" . அது தவறு உண்மையில் உணர்ச்சியால் வரும் மோகம் வேறு உண்மையால் வரும் மோகம் மனைவியிடம் மட்டும்.
  மிக்க நன்றி ... .
  தங்களின் சித்தர் பணி என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
  என்றும்..நட்புடன்
  chakra....
  http://shivasiddhargal.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. நண்பா ,

  அருமையான பின்னூட்டத்தை தந்தற்கு நன்றி.

  பணம் இருந்தால் தான் மனம் நிறைவடையும் என்பது அவரவர் மனதினை பொருத்தது(பட்டினத்தார்).

  மனம் நிறைந்தால் தான் போகம் வரும் என்பது அவரவர் மன(பண) நிலை பொருத்தது.

  "உண்மையான மோகம் என்பது மனைவியிடம் மட்டும் தான்" .  என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

  பதிலளிநீக்கு