சித்தரின் பாடல்கள் பொதுவாக பரிபாஷையாக இருக்கும், ஆயினும் சில சித்தர்கள் வெளிப்படையாகவே தங்கள் கருத்துகளை சொல்லும் தன்மையுடையவர்களாக இருப்பார்கள். இவர்களில் குதம்பை சித்தர் குறிப்பிட தக்கவர். அவரின் பாடலில் சில உங்களுக்காக ....
ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண்சாதி மற்றவெல்லாம் ?
பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்
தீர்ப்பாகச் சொல்வதென்ன குதம்பாய்
தீர்ப்பாகச் சொல்வதென்ன?
பார்ப்பாரை கர்த்தர் பறையரைப் போலவே
தீர்ப்பாய் படைத்தாரடி குதம்பாய்
தீர்ப்பாய் படைத்தாரடி ?
பற்பல சாதியாய் பாரிற் பகுத்தது
கற்பனையாகுமடி குதம்பாய்
கற்பனையாகுமடி ?
ஆதி பரப்பிரம்மம் ஆக்கு மக்காலையில்
சாதிகள் இல்லையடி குதம்பாய்
சாதிகள் இல்லையடி?
சாதி வேறு என்றே தரம் பிரிபோற்குச்
சோதி வேறாகுமடி குதம்பாய்
சோதி வேறாகுமடி ?
சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று
ஓதி உணர்ந்தறிவாய் குதம்பாய்
ஓதி உணர்ந்தறிவாய் ?
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண்சாதி மற்றவெல்லாம் ?
பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்
தீர்ப்பாகச் சொல்வதென்ன குதம்பாய்
தீர்ப்பாகச் சொல்வதென்ன?
பார்ப்பாரை கர்த்தர் பறையரைப் போலவே
தீர்ப்பாய் படைத்தாரடி குதம்பாய்
தீர்ப்பாய் படைத்தாரடி ?
பற்பல சாதியாய் பாரிற் பகுத்தது
கற்பனையாகுமடி குதம்பாய்
கற்பனையாகுமடி ?
ஆதி பரப்பிரம்மம் ஆக்கு மக்காலையில்
சாதிகள் இல்லையடி குதம்பாய்
சாதிகள் இல்லையடி?
சாதி வேறு என்றே தரம் பிரிபோற்குச்
சோதி வேறாகுமடி குதம்பாய்
சோதி வேறாகுமடி ?
சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று
ஓதி உணர்ந்தறிவாய் குதம்பாய்
ஓதி உணர்ந்தறிவாய் ?
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
வணக்கம் நண்பா ,
பதிலளிநீக்கு"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
தங்களின் இன்றைய பதிவு, சாதிவெறிக்கு ஒரு சாட்டைஅடி. மற்றும் சாதி ஒழிந்தால்தான் சோதி தெரியும் என்று மகான் குதம்பை சித்தர் அருமையாக கூறுகிறார்.
நன்றி ... .
தங்களின் சித்தர் பணி என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
என்றும்..நட்புடன்
chakra....
http://shivasiddhargal.blogspot.com
நண்பா ,
பதிலளிநீக்குதங்களின் பின்னூட்டம் மிக அருமை.
"சோதி தெரிய வேண்டுமென்றால் சாதி தெரிய கூடாது "-என்ற தங்களின் கருத்து கண்டு மகிழ்ந்தேன்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.