மந்திரங்களின் மூலம் என்ன பெறமுடியும் ?
பாடல் :
மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ
மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்தெலுத்துமே
விளக்கம்:
உலகில் மனிதகுலம் தோன்றியபோது எந்த வித மந்திரங்களும் கிடையாது. பிறகு பல ரிஷிகள் மற்றும் முனிவர்களால் உருவாக்கப்பட்டது தான் மந்திரங்கள். மனதின் திறத்தை கொண்டு எழுத்துகளை ஒன்றுசேர்த்து கூறும்போது ஒருவித சக்தி நமக்கு கிடைக்கிறது. ஆயினும் இதனால் நமக்கு நன்மை உண்டு என்றாலும் பிறவா பேரின்ப நிலைக்கு மந்திரங்கள் உதவாது என்பது எனது கருத்து.
கற்ற மந்திரத்தால் இறந்த உடலுக்கு உயிர் கொடுக்க முடியமா? முடியாது
இறந்தப்பின் நாம் படித்த மந்திரத்தால் நமக்கு என்னப்பயன் கிடைக்கும் ? அல்லது நம்மால் அதைதான் பிரயோகிக்க முடியுமா ? முடியாது அல்லவா.
உண்மையான மந்திரம் என்பது ஐந்தெழுத்து அந்த ஐந்தெழுத்தையும் மெய்உணர்ந்தப்பின் எந்த மந்திரம் நமக்கு தேவைப்படாது ...
" நமசிவய என்ற மந்திரம் தான் அது"--இந்த ஐந்தெழுத்தைதையும் யார் நன்றாக உணர்ந்து பயன் படுத்துகிறார்களோ அவர்களே பிறவா யாக்கையை பெறமுடியும்.
இவை வெறும் வார்த்தைகள் கிடையாது பஞ்சபூத தத்துவத்தைகொண்டது.
"முடிந்தால் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ."
"அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்திலும் உள்ளது"
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
Bala, Nee oru Arivu Kalanjiyam.....
பதிலளிநீக்குMAAMS
Bala, As per my Understanding, the Moola / Peeja Manthras are ever exisitng.. Echoing in the universe always ... especially OHM ... Rishis discovered them and revealed it to the world for the usage by common people thru Vedas....
பதிலளிநீக்குNeverthelss this is said in the verse of Sivavaakkiyar.. There must be some meaning in it... I think It is said about the Mantras used by wrong people for wrong purpose...
So let us not dispute it..:-)
Nice post..
http://anubhudhi.blogspot.com/
அன்புள்ள சங்கர் ,
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி . மந்திரங்களுக்கு யாம் எதிரி அல்ல .
ஆயினும் புரியாத வார்த்தையை சொல்ல யாம் விரும்பவில்லை.
இருப்பினும் இது சிவவாக்கியரின் பாடல் என்பதால் யோசிக்கவேண்டிய விஷயம் தான்.
அவர் கூறவருவது உன்னையே நீ அறி என்பது தான்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
அன்புள்ள பெரம்பலூரான்,
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி .
நாங்கள் அறிவு களஞ்சியம் அல்ல ,சித்தர் களஞ்சியத்தில் உள்ள பித்துகள் .
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
அன்புடையீர்!
பதிலளிநீக்குஆண்டவன் அனுபூதி வலைப்பதிவை பார்வையிடும்போது தங்களுடைய கருத்துரையை கண்டேன். அதன் விளைவு
தங்களின் வலைப்பதிவினை இன்றுபார்த்தது.
தங்களின் வலைப்பதிவும் டெம்ப்ளேட்டும் நன்றாக உள்ளது.
தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்வையிட்டேன். நன்றாக உள்ளது.
கோம்பை சித்தர் பதிவு அருமை.
நான் பரம்பொருள் அருட்சிவத்தின் மீதும், சித்தர்கள் மீது மிகுந்த ஈடுபாடுடையவன்.
சித்தர்களில் சிவவாக்கியர் பாடல்களில் நிறைய முரண்பாடு உள்ளது. அவரின் பாடல்களை அறிந்து ஆராயும்போது, ஆராய்பவரின் நிலைக்கேற்ப பொருள்கள் மாறுபடுகின்றது. ஆராய்பவர் ஆன்மீக (ஆன்ம)நிலை (Spiritual Stage) எந்த அளவுக்கு உள்ளதோ, அந்த அளவுக்கு அர்த்தங்கள் எடுத்துக்கொள்ளலாம். இது குறித்து நிறைய விவாதிக்கலாம்,
தாங்கள் குறிப்பிட்டுள்ள அரும்பாவூர் எங்கு உள்ளது?.பதில் வேண்டுகின்றேன்.
எனது மின்அஞ்சல் முகவரி: saimeenan@gmail.com
தொடர்பு கொள்ளுங்கள். நான் தங்களை வரவேற்கின்றேன்.
எனது அருட்சிவம் வலைப்பதிவின் முகவரி:
http://siddharkal.blogspot.com
இந்த வலைப்பதிவிற்கு நேரமிருப்பின் வந்துபாருங்கள். சமீபமாகத்தான் ஆரம்பித்தேன். இன்னும் நிறைய இடுகைகள் வெளிவரும். தொடர்ந்து வாருங்கள்.
நானும் தங்களது வலைப்பதிவை தொடர்ந்து வருவேன்.
வணக்கம் நண்பா ,
பதிலளிநீக்கு"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
மிக அருமையான கருத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி...
தங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
என்றும்..நட்புடன்
chakra....
http://shivasiddhargal.blogspot.com
அன்புள்ள சிவஞான ஐயா ,
பதிலளிநீக்குதங்களின் வேண்டுகோள் பாபாஜிக்கு கேட்டது என்னவோ !
அவரைப்பற்றிய தொடர் உங்களுக்காக , நான் கீழ்காணும் வலைப்பூவில் பார்த்தது .
http://gnanamethavam.blogspot.com/2011/02/1.ஹ்த்ம்ல்
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.