செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

சித்தர்களின் பாடலில் உள்ள உண்மையைப்பற்றி

காரைசித்தரின்  பாடலில் இருந்து,
சித்தரெல்லாம் உண்மைதனை மறைத்தாரென்றே
   செப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன்
சித்தர் மொழி நூலதனைத் தொட்டபோதே
    சித்தரேலா மொற்றரேனச் சேர்ந்து நிற்பார்

சித்தமுறுங் குணநிரைவில் நாட்டம் கொள்வார்
   சிறிதலுக்கைக் கண்டாலும் விலகிப் போவார்
சித்தநிறை உள்ளவர்க்கே சித்தி தோன்றும்
 சித்தமிலார் வித்தையெல்லாம் சிரிப்பே கண்டீர்!.

விளக்கம் :
"என்று நீங்கள் சித்தரின் பாடல்களை படிக்க ஆரம்பித்து விட்டீர்களோ அன்றே அவர்களின் தொடர்பு உங்களுக்கு கிடைத்துவிட்டது" என்றும் அவர்கள் "உங்களிடம் தவறு இருந்தால் அதை சுட்டி காட்டி உங்களை திருத்தி கொள்ளசொல்வார்கள் ", நீங்கள் உங்களை  மாற்றி கொள்ளவில்லையென்றால் அவர்கள் உங்களை விட்டு  விலகி செல்வார்கள் " .

அவர்கள் காட்டிய வழியில் சென்றால் அவர்கள் உங்களை நன்றாக வழி நடத்தி செல்வார்கள் .
"சித்தம் முழுவதும் சித்தனைப்பற்றி நின்றால் சித்திகள் யாவும் கிட்டும்"
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

1 கருத்து:

 1. வணக்கம் நண்பா ,
  "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
  சித்தரின் கருத்து சத்தியம் .....அதை உணர்ந்தவன் என்ற முறையில் தைரியமாக கூறுகிறேன்.
  நன்றி ... .
  தங்களின் சித்தர் பணி என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
  என்றும்..நட்புடன்
  chakra....
  http://shivasiddhargal.blogspot.com

  பதிலளிநீக்கு