வியாழன், 10 பிப்ரவரி, 2011

வால்மீகரின் சூத்திரம்...

நேற்றைய தொடர்ச்சியிலிருந்து ....

அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
   அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்
பிரிந்து வரும் ரேசகமே யோக மார்க்கம்
  பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
   மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தான் சித்தன்
   சிவசிவா அவனவன்நென்  றுரைக்க லாமே.
விளக்கம் :
பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த கருத்து.
சரியை : மந்திரங்களினால் வணங்குவது/ சாமி படங்களைவைத்து பூசை செய்வது
கிரியை:  கற்சிலைகளையும் , செம்பினால் மற்றும்  உலோகத்தினால்  செய்த              
                 சிலைகளை   வணங்குவது.
யோகம்: தம் உடலை யோக பயிற்சியின் மூலம் இறைவனை அடைய முயற்சிப்பது.
ஞானம் : தம்முடைய அனுபவ கல்வி மற்றும்  சித்தர்களின்  வழிமுறையை  கண்டு 
                அதை பின்பற்றுவது .

ஆனால் மேற்கண்ட பாடலில் நம் உடலில் இயங்கும் சுவாசத்தை வைத்து பிரித்து கூறுகிறார் .

எல்லாரும் வாசியை(மூச்சு) கவனிப்பது இல்லை.  உள்ளே இழுக்கும் சுவாசம் , வெளி விடும் சுவாசம் என்று மட்டும் தான் நமக்கு தெரியும்.  அவற்றின் அளவுகளை  தெரிந்து கொண்டு நாம் பயிற்சி செய்தால் நாமும் சித்தன் தான் . சுவாசத்தின் மூலம் வரும் உணர்வு அற்ற நிலை தான் ஞான மார்க்கம் அதுவே வாசியாகும்( காற்றின்றி வாழ்வது ).

எப்படி வாசி பயிற்சி செய்ய நான்கு நிலைகளை தாண்டி நாம் தாண்டி வர வேண்டி உள்ளதோ அதைப்போலவே இறைவன் யார் என்று உணரவும் நாம் சில நிலைகளை தாண்டி தான் வரவேண்டும்  . இவ்வுலகில் வாழ்ந்த எல்லா சித்தர்களும் ஆரம்ப நிலைகளில் பல வித பூசை செய்தும் , கோயில் மற்றும்  குளங்கள் வெட்டியும் ,இறுதியில் தான் தாமே தங்களை அனுபவங்களின் மூலம் அறிந்து கொண்டார்கள் .
சித்தர்களைப்பற்றி தெரிந்து கொள்ள எல்லாரும் இந்த நிலைகளை தாண்டி வந்தால் தான் அவர்களுடைய வழிப்பாடு மற்றும் வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த உடலில் தான் சிவசத்தி உறைகிறார்கள்(சீவன்(உடல்), பிராணன்(உயிர்) ). இதனை தெள்ள தெளிவாக அறிந்து கொண்டவனே சித்தன் .
"பாமர மக்களுக்கும் இறைநிலையை எடுத்து சொல்லவே சித்தர்களால் உருவாக்கப்பட்டது தான் இன்று நாம் வழிப்படும் கோவில்கள் ."

மீண்டும் ஆய்வு தொடரும் .....
 என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

5 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பா ,
    "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
    தங்களின் பதிவைக்கண்டு மெய்சிலிர்த்துபோகிறேன், ஏன்என்றால் வாழ்க்கைக்கு மிக தேவையான சித்தர் பாடலை பதிவு செய்து அதில் உள்ள கருத்ததை,மிக எளிமையாக உலகிற்கு வெளிப்படுத்தி , அஞ்ஞான பூட்டை உடைத்ததற்கு நன்றி...

    தங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
    என்றும்..நட்புடன்
    chakra....
    http://shivasiddhargal.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. நண்பா ,
    தங்களின் பதிவுக்கு நன்றி .
    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  3. DEar Bala, True.. Sidhdhars have given such knowledge to all in good spirit. Hope this knowledge spreads...

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  4. மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
    மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு //
    உயர்ந்த எளிய தத்துவம்.
    உயர்ந்த விஷயங்கள் எல்லாம் மிகவும் எளிமையானவையே!
    நாம் உயிருடன் இருக்கிறேம் என்பதைப் போல!!

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள தோழி ராஜராஜேஸ்வரி ,

    "உயர்ந்த எளிய தத்துவம்"- உள்ளத்தால் உயர்ந்தவர்களால் மட்டும் தான் உணர முடியும். அது உங்களாலும் முடியும். முயற்சி செய்யுங்கள் சித்த முனி அகத்தியர் அருளினால்.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு