வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

வால்மீகரின் சூத்திரத்திலிருந்து(சரியை,கிரியை,யோகம்,ஞானம்)...

நேற்றைய தொடரில் வால்மீகர் நம் உடலில் நடக்கும் சுவாசத்தை வைத்து விளக்கம் கூறினார்.   இன்றைய பதிவில் நிகழ் காலத்தில் நடக்கும்  நிகழ்வுகளை கொண்டு விளக்கி கூறுகிறார்.

ஆமாப்ப வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
     அவரவர் கண்டதையெல்லாம் சரிதை என்பார்
ஓமப்பா கல் செம்பைத் தெய்வமென்றே
    உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார்
வாமப்பா  யோகமென்று கனிகாய் தின்று
    வாய்பேச ஊமையைப் போல் திரிகுவார்கள்
காமப்பா ஞானமென விண்டு மேலும்
   காக்கைபித்தன் மிருகம் போல் சுற்றுவாறே

விளக்கம்:
 இன்றைய பதிவானது தெளிவான தமிழில் உள்ளது இருப்பினும் எமக்கு தெரிந்த கருத்துகள் பின்வருமாறு.
சரியை :  பல நூல்களை கற்றுக்கொண்டு எல்லாம் தெரிந்த மாதிரி நடந்து கொள்வது

கிரியை : கல்,செம்பு சிலைகளை வைத்துகொண்டு பூசை செய்து அதைகொண்டு     
                  மனமுருக அழுகுவது மற்றும் மகிழ்வது.

யோகம்:  சரியாக உணவு உண்ணாமல் வெறும் காய் கனிகளை உண்டுகொண்டு
                 யாரிடம் பேசாமல் ஊமைப்போல் யோகம் பண்ணுகிறேன் என்று கூறுவது .

ஞானம்: ஞானத்தை தேடி காடு மலைகளில் அலைவது.
              எவ்வாறு      காக்கைக்கும்  ,பித்தனுக்கும் மற்றும் மிருகத்திருக்கும் எந்தவொரு     இடமும்    சொந்தமில்லை , அவைகள் அதன் விருப்பதிருக்கு ஏற்றார் போல நடந்து கொள்ளும் .

"ஞானம் என்பது நம்மால் நம்முடலில் உள்ளதை அறிவது"
இதன் மூலம் அவர் கூற வரும் பொய்  சாமியார்களின் வேடத்தை நாளைய பதிவில் காணலாம்.

ஆய்வு தொடரும்..
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

4 கருத்துகள்:

  1. VEry Nice Information... Fraud Swamis are still persisting here... Taking on the True wisdom by all is very difficult. Till such time they have to do pujas for Statues and Kumbhas to progress on spirituality. Definitely once they reach a level TRUE Wisdom will take over.

    Thanks for sharing.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. "ஞானம் என்பது நம்மால் நம்முடலில் உள்ளதை அறிவது"///
    உன்னையே நீ அறிவாய்
    அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு.

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள தோழி ராஜராஜேஸ்வரி ,

    தங்களின் வருகைக்கு நன்றி, தாங்களின் கருத்து மிகச்சரியே.
    "அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு"- உண்மையானது . இதை உணர்ந்தவர்கள் தான் சித்தர்கள். எங்கும் ஓடி(மலைகளில் ) ,ஒளியாமல்(குகைகளில்) இல்லறத்தில் இருந்து கொண்டும் தங்களின் ஞானவேட்கையை தனித்து கொண்டவர்கள்.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  4. Good way for ஞானம் please read this book.
    http://www.vallalyaar.com/?p=409

    பதிலளிநீக்கு