பாடல்:
சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
தூடிப்பா ருலகத்தில் சிற்சில் லோர்கள்
தெற்றுவா ராவர் பிழைக்க அநேக வேடம்
தேகத்தில் அணிந்து கொண்டு திரிகுவார்கள்
பற்றுவார் குருக்கள் என்பார் சீடரென்பார்
பையவே தீட்ச்சை வைப்பார் தீமை என்பார்
கத்துவார் திருமூர்த்தி தாமே யென்று
காரணத்தை யறியாத கசடர் தானே .
தானென்றே உலகத்தில் சிற்சில் லோர்கள்
சடைபுலித்தோல் காசாயம் தாவடம்பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்
திருமாலைக் கண்ணாலே கொண்டோ மென்பார்
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
காரணத்தை யறியாமல் கதறுவாறே.
விளக்கம்:
மேற்கண்ட பாடலில் யாம் அறிந்த கருத்து.
பலவித நூல்களை படித்துவிட்டு ,பல இடங்களுக்கு சென்று விட்டு திரியும் வகையினர் உண்டு . அவரவர் பிழைக்க தம் உடலெங்கும் பலவித வர்ணங்களை மதத்தின் பெயரால் பூசிக்கொண்டு திரிவார்கள் .தம்மை தானே குருவென்றும் , மற்றவர்களை சீடர்கள் என்றும் கூறி அவர்களுக்கு தீட்சை அளிப்பார்கள். தம்மையே திருமூர்த்தி என்று சொல்லி அலங்கரித்து கொள்வார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களின் மதிப்பையும் , பண செல்வாக்கையும் உயர்த்திகொள்வார்கள். இவர்களின் நோக்கம் , மற்றவர்களிடம் இருந்து தம்மை வேறுப்படுத்தி கொள்வது. அதன் மூலம் சம்பாதிப்பது. ஆனால் இவர்கள் உண்மையை அறியாத மூடர்கள் என்று சாடுகிறார். இவர்கள் பொதுவாக வெளிவேசம் போடும் வேசிகள் ஆவார்கள் . தீட்சை பொறுத்து பணம் வாங்கும் குருக்களும்(போலி) உண்டு, பலவித மாலைகளையும் ,மத சின்னங்களையும் தேகமெங்கும் அணித்து கொண்டு தம்மையே கடவுளாக காட்டிக்கொண்டு பணம் சம்பாதிக்கும் கூட்டமும் இங்கு உண்டு.
சில குருக்கள் , நீண்ட சடையைக் கொண்டும், புலித்தோல் வைத்திருந்தும் ,உடலெங்கும் சாயம் பூசிக்கொண்டும் , சாம்பல் பூசிக்கொண்டும் தாங்கள் மிகச்சிறந்த யோகிகள் என்றும் கூறுவார்கள் .சிவ தீட்சை தருகிறேன் என்றும் திருமாலை நாங்கள் கண்ணால் கண்டோம் என்றும் கூறுவார்கள்.
இவர்கள் தம்மையே ஞானிகள் என்றும் கூறிகொள்வார்கள்.
" நீண்ட ஜடாமுடி தரித்த எல்லாரும் ஞானிகள் அல்ல ",
" புலித்தோல் வைத்திருக்கும் எல்லாரும் யோகிகள் அல்ல".
" தம்மையே குருவென்று சொல்லிகொள்ளும் யாவரும் உண்மையான குரு அல்ல" .
இவையெல்லாம் , தம்மை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டவும், சமுகத்தில் தமது அந்தஸ்தை உயர்த்திகொள்ளவும் தான் .உண்மையான பரிபூரணத்தின் காரணத்தை இவர்களால் புரிந்து கொள்ள முடியாது ,ஏனெனில் மாயையில் இவர்கள் மாட்டிகொண்டார்கள் என்பதே உண்மை.
இன்றைய சாமியார்கள் வலம்வருவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் விலை உயர்ந்த வாகனங்களில் தான். உண்மையான குருக்களோ தம்மை வெளிப்படுத்தி கொள்ளமால் பிச்சைக்காரர்களாக தெருவெங்கும் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
"உண்மையான குரு உம்மையே தேடி வருவார்" என்பதே உண்மை.
இதுவே சித்தர்களின் வாக்காகும். உங்களின் குரு யாரென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் சித்த தலைவன் ,சித்தமுனி ,தமிழ் முனி அகத்தியரை வழிபடுங்கள் . அவரே உங்களுக்கு வழி காட்டுவார்.

உண்மையான குரு உம்மையே தேடி வருவார்//
பதிலளிநீக்குஉண்மைதான்.
Bala ... Please do some work in Office Maaplai !!!
பதிலளிநீக்குஅன்புள்ள தோழி,
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி, உண்மையான குருக்களை தேடி அலைவது ஒரு சுகமாக இருந்தாலும் நம்ப முடியாத பல விசயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
அன்புள்ள பெரம்பலூறான் ,
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி, தாங்களின் கருத்து மிகச்சரியே , ஆயினும், தாங்களும் அதே வேலையை தான் செய்கிறீர்கள் என நினைக்க தோன்றுகிறது.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.