வியாழன், 24 மார்ச், 2011

சதுரகிரியின் சந்தன மகிமை அனுபவம் -1

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,

நேற்றைய தொடர்ச்சி,

நாங்கள் அனைவரும் பெங்களுருக்கு புறப்பட்டு சென்றுவிட்டோம், பின் அவர் கொடுத்த பிரசாதத்தை என் மனைவிக்கு பார்சலில் தான் அனுப்பி வைத்தேன்.

என் மனைவியோ உடனே சாப்பிடாமால் 2 நாட்கள் கழித்து தான் சாப்பிட ஆரம்பித்தாள். அந்த வாரம் நாங்கள் திருச்சியில் உள்ள
மிகப்பெரிய மருத்துவர் சுந்தர் ராஜனிடம் வெள்ளிக்கிழமை அன்று செக்கப் செய்ய அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி இருந்தோம்.

முதல் நாள் சாப்பிட ஆரம்பித்தும் ஒன்றும் அவளுக்கு திருப்தி ஏற்படவில்லை, நான் சொன்னேண் அந்த சந்தனம் தீரும் வரை சாப்பிடு
இது சதுரகிரியாரின் பிரசாதம் என்று கூறினேன். இரண்டாவது நாளும் சாப்பிட்டாள் ஒரு மாற்றமும் ஏறபடவில்லை.
மூன்றாவது நாள் சந்தனத்தை சாப்பிட்டபின் அவளுடைய தலையில் மின்னல் பாய்ந்ததுப்போல் அவள் உணர்ந்தாள் .
உடனே எனக்கு போன் செய்து மாமா எனக்கு தலையில் இருந்து ஒரு 50 கிலோ குறைந்ததுப்போல் இருக்கிறது, எனக்கு ரொம்ப சந்தோசமாக
இருக்கிறது என்று கூறினாள்.

எனக்கு ஒரே ஆச்சர்யம், இருப்பினும் வரும் வெள்ளிக்கிழமை அன்று பரிசோதித்து பார்த்துவிடுவோம் என்று கூறினேன்.
பணியின் நிமித்தமாக என்னால் வெள்ளிக்கிழமை செல்லமுடியவில்லை ஆனால் என் மனைவியோ வெள்ளிக்கிழமை அன்று போய் மருத்துவரை
பார்த்து செக்கப் செய்து பார்க்கும் போது, அம்மா உனக்கு ஒன்றுமே இல்லை, உனக்கு சந்தேகம் இருந்தால் ஸ்கேன் பண்ணி பாருங்கள்
என்று கூறிவிட்டார். உடனே ஸ்கேன் எடுத்து பார்த்தால் என்ன ஆச்சர்யம் ,ஒரு பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்.

எங்களுக்கு தாங்க முடியாத சந்தோசம், நம்ப முடியாத அனுபவம் அது.
அந்த சந்தனத்தை நான் பார்சலில் தான் அனுப்பிவைத்தேன். அன்று முதல் இன்று வரை தலைவலி என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

நோய் வாய்ப்பட்டவர்களுக்கு நாங்கள் சந்தனத்தை அவர்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கின்றோம்.

சதுரகிரியாரின் சந்தனம் மூலிகைகளின் சங்கமமாகும்.

 http://gurumuni.blogspot.com/ 
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

6 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. Bala your experiences in Saduragiri is really unexpected one. But one of my friend name Aravind he met with one yogi in saduragiri, but after sometime he can't find out him, the Yogi suddenly disappeared. So after that meeting,he got developments in his meditation. Similarly Tavayogi also given some extraordinary experiences to some of the peoples.

    Please visit http://thavayogi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள கார்த்திக்கேயன் ,

    தங்களின் வருகைக்கும் ,பதிவுக்கும் நன்றி.

    தாங்கள் கூறுவதைப்போல் , கண்ணெதிரே மறைந்த சித்தர்கள் பலர் ,அவர்கள் மறைந்தப்பிறகே அதனை நம்மால் உணர முடியும். சில அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது , அதனை வெளிச்சொல்ல நமக்கு அனுமதி கிடையாது.

    சித்தர் ரகசியம் தேவரகசியத்தை விட உயர்ந்தது.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. Hello Sir,
    I am new to this blog. My mother is suffering from one side head ache for the part 18 yrs. We approached many doctors and siddha and ayurvedha. Nothing worked out. I saw this blog and please let us know how to get that 'SAndhanam' for my mother's permanent cure. Pls hep us.
    Thank You.

    பதிலளிநீக்கு