செவ்வாய், 8 மார்ச், 2011

ஆதி சித்தனின் வருகை...

நேற்றைய தொடர்ச்சி...

இது நம்ப முடியாதது என பலர் நினைக்கலாம் ,அதைப்பற்றி  நான்  கவலைப்பட போவதில்லை, ஏனெனில் இதனை எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் ,என் நண்பர்களும் அனுபவத்தால் கண்டவர்கள்.


தலைவனை  தரிசனம் செய்து விட்டு, வீட்டுக்கு வந்தாகி விட்டது. என் மனதில் ஒரே கவலை வருவாரா இல்ல வரமாட்டாரா ? என்ன செய்வது தேவை இல்லாமல் நண்பர்களிடம் வேறு பந்தயம் கட்டியாகிவிட்டது .
என்செயல் யாவது ஒன்றும் இல்லை இனி தெய்வமே உன்செயல் என்று பட்டினத்தாரை மனதில் நினைத்துக்கொண்டு எனக்கு தெரிந்த ஆதி சித்தனின் தமிழ் மந்திரத்தை மனதில் உச்சரித்து கொண்டு இருந்தேன்.

அவன் வரமாதிரி தெரியவில்லை ,அதனால் மனதை தேற்றிகொண்டு நண்பர்களிடம் சென்று தோல்வியை ஒப்பு கொள்ளலாம் என்று வீட்டை விட்டு கிளம்பினேன்.

எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் தான் உட்கார்ந்து நாங்க சத்சங்கம் செய்வது வழக்கம் . எல்லாரும் என்னைப்பார்த்து சிரித்தார்கள்.
பாலா ரொம்ப ஆசைப்படாத சித்தன் வரானா பார்க்கலாம் என்று கேலியாக என்னைப்பார்த்து சிரித்தர்ர்கள்.

அப்போது மணி சரியாக எட்டாக 10  நிமிடம் இருந்ததது.  எல்லாரும் என்னைப்பார்த்து இப்படி தான் நக்கல் பண்ணனும் சொல்லமுடியாத அளவுக்கு என்னை பாடா படுத்தினார்கள் . எல்லாம் அவன் செயல் என்று இருந்தபோது , எங்கள் ஊருக்கு வரும் பேருந்தில் இருந்து , ஒரு வயதான பெரியவர் இறங்கி வந்து கொண்டு இருந்தார்.  தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவர் ஒரு பரதேசி போல் இருந்தார்  யாரும் அவரை சரியாக உன்னித்து பார்க்கவில்லை . நேரம் நெருங்க நெருங்க எங்களை நோக்கி அவர் வந்து கொண்டு இருந்தார்.

அவர் எங்களை கிட்டவந்து நெருங்கும் நேரம்,  நாங்க அனைவரும் வெலவெலத்து போனோம். நல்லதொரு வெள்ளை வேஷ்டி , மார்பில் துணி இல்லை , நீண்ட ஜடா முடி , கையில் கமண்டலம் , உடல் முழுக்க ருத்ராட்சை அணிந்து இருந்தார். அவருடைய கண்களை எங்களால் பார்க்க முடியவில்லை ஏனென்றால், எங்களுக்கு  அந்த சக்தி இல்லை .
தலையில் ஜடாமுடியை நன்றாகா முடித்து போட்டு அழகாக  வைத்திருந்தார் .

அவரை பார்த்தவுடன், எங்களுக்கு ஒன்றும் பேச தோன்றவில்லை , இருப்பினும் என் வீட்டருகே வந்து நின்றார்.  பின் என்னைப்பார்த்து இங்கே வா என்று உரிமையாக அழைத்தார்.  அவரிடம் மிக மரியாதையாக சென்று , ஐயா என்று அழைத்தேன்.

இன்று உனக்கு பிறந்த நாள் தானே என்று வினவினார், நான் எதுவும் கூறாமல் மெளனமாக நின்றேன்.
உனக்கு இன்று பிறந்த நாள் , ஆகையால் உன்னை சந்திக்க சொல்லி எனக்கு உத்தரவு வந்துள்ளது வா மகனே  உன் வீட்டுக்குள் போகலாம் என்று அழைத்தார்.

நான் எதுவும் பேசவில்லை ,என் நண்பர்களோ அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை .

நம்ப முடியவில்லையா உங்களால் ?  இந்த கலியுகத்தில்....

அவருடன் நடந்த உரையாடலை நாளைய பதிவில் காணலாம்,

சிவ அனுபவம் தொடரும்...
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

10 கருத்துகள்:

 1. Bala,

  Please post the discussions between you and the Saint... Very eager to know the discussions.

  பதிலளிநீக்கு
 2. குருவே ,

  தங்களின் இந்த பதிவை தொடர்ந்து எழுதி இந்த நாட்டில் உள்ள அனைத்து மனிதர்களின் உள்ளத்தில் அன்பினை பிரகாசிக்க செய்யுங்கள்.
  மனதில் ஆதி சிவனின் நம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக அவரின் தரிசனம் கிடைக்கும் என்பது உறுதி என்று இதை படிக்கும் அனைவர்க்கும் ஒரு பாடமாய் இருக்கும் என்பதற்கு ஐயமில்லை.
  இருப்பினும் சித்தர் வீட்டுக்குள் வந்து குருவே உங்களிடம் என்ன கூறினார் என்பதை நீங்கள் இந்த அடியேனுக்கு சற்று தெளிவாக கூறுங்கள் குருவே .

  ஆதி சிவனே போற்றி !
  குருவே போற்றி !

  இப்படிக்கு
  தமிழழகன் .

  பதிலளிநீக்கு
 3. பாலா, அந்த சிவபெருமானின் கடாட்சத்தில் பூரணமாக உள்ளீர்கள்... வாழ்த்த தகுதி இல்லை...எனவே வணங்கிக் கொள்கிறேன்...

  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் நண்பா ,
  "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
  தங்களின் அருமையான அனுபவபகிர்வில் நாளுக்கு நாள் நல்ல விறுவிறுப்பு,மேலும்தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்....
  நன்றி...
  தங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
  என்றும்..நட்புடன்
  chakra....
  http://shivasiddhargal.blogspot.com/

  பதிலளிநீக்கு
 5. ஐயா உங்களின் இந்த முயற்சியும் பதிவும் நன்றாகத்தான் உள்ளது ஆனால் தங்களின் முதல் பதிவில் சொன்னது என்னை கொஞ்சம் நெருடுகிறது. எழுதலாமா வேண்டாமா என்று நினைத்த பொழுது தங்களுக்கு தடங்கள் வந்ததாக சொன்னிர்கள் அதை மீறி எழுதி விட்டீர்கள் ஆனால் இது சரிதானா என்பதை மீண்டும் யோசியுங்கள். எனக்கும் பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கிறது ஆனால் பகிரலாம் எனும்போது ஏதாவது ஒரு விதத்தில் தட்டி போய்விடும். பின்பு அந்த முயற்சியை விட்டு விடுவேன். அது போல பல பதிவுகளை போடாமல் விட்டுள்ளேன்.

  இருந்தாலும் தங்களின் இந்த தெய்வீக நிகழ்வு மனதை நெகிழ வைக்கிறது. தொடருங்கள் நானும் காத்திருக்கிறேன். இறைவனின் திருவிளையாடலை கேட்கும்போதும் படிக்கும்போதும்
  மனமே நீ சரணாகதி அவனடி என்றாகிவிடுகிறது.

  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சிவனருள்

  பதிலளிநீக்கு
 6. @பாலா:
  அன்புள்ள பாலா ,
  தயவு செய்து ஆதி சித்தனின் தமிழ் மந்திரத்தை கூறுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. ஆதி சித்தனின் தமிழ் மந்திரத்தை கூறுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்

  -praveena

  பதிலளிநீக்கு
 8. antha tamil archanai manthirathai neengal solla thadai ethuvum illai endraal sollungal anna

  -praveena

  பதிலளிநீக்கு
 9. Mathippirkuriya Iyya [Bala]

  Athi siddarin tamil manderathai prasurikkumaru
  miga thazmaiudan kettuk kolkiren.

  Nandri

  பதிலளிநீக்கு