வெள்ளி, 18 மார்ச், 2011

ஞான நிலையில் உள்ளவரின் மன நிலை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

எனது சிவ அனுபவங்களை சில நாள்கள் ஒதுக்கி வைத்துவிட்டு ,எமது      குறிக்கோளான சித்தர் பாடல்களை எழுதுகிறேன்.

வருகின்ற வாரம் சதுரகிரியின் சந்தனமகிமை என்ற தலைப்பில் ,எனது வாழ்வில் நடைப்பெற்ற மூன்று முக்கிய  நிகழ்வுகளை மட்டும்  எழுதுகிறேன். இதனை படிக்கும்போது உங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.

என்னுடைய அனுபவங்கள் அனைத்தும் உண்மை அவர்களின் அனுமதியுடன் தான் இதை எழுதுகிறேன். தற்சமயம் நான் ஞான மார்கத்தில் செல்வதால் , நான் எழுதும் சித்தர் பாடல்களை கண்டு என்னை யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் . இந்த நிலையை அடைய கூட அந்த ஆதி சித்தன் அருள் தேவை.

சிவவாக்கியரின் பாடலில் இருந்து ,

 ஞான நிலையில் உள்ளவரின் மன நிலை ....
பண்டுநான் பறித்துஎறிந்த பன்மலர்கள் எத்தனை ?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை ?
மிண்டராய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை ?
மீளவும் சிவாலயங்கள் சூழ்ந்தது எத்தனை ?


அண்டர்கோன் இருப்பிடம் அறிந்த உணர்ந்த  ஞானிகாள் 
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரோ
விண்டவேத  பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே ...

மனிதனின் நிலை

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலம் கவிழ்ந்தபோது  நாறுமென்று போடுவார்
எண்  கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசனே...


அனுபவங்களும் ,ஆய்வுகளும் தொடரும்....
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

4 கருத்துகள்:

  1. மிக தைரியமான அனல் வரிகள்..
    "கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே"

    "ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி"

    பதிலளிநீக்கு
  2. புரிந்தமாதிரியும் உள்ளது புரியாதமாதிரியும் உள்ளது என் செய்வேன் எல்லாம் அவன் செயல்
    நேரம் வரும்போது தெரியவேண்டியத்தை தெளிய வைப்பன் என்ற சிந்தனையோடு

    உங்களின் அடுத்த பதிவை நோக்குகிறேன்

    நன்றி
    சிவனருள் பதிவன்

    பதிலளிநீக்கு
  3. பாலா, என்னைப் போன்றவர்களுக்கு, பொழிப்புறை இல்லாமல் பாடல்கள் சரியாக புரியவில்லை... குறைந்தபட்சம், கடினமான வார்த்தைகளுக்கு அர்த்தம் சொன்னாலாவது புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

    நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு