செவ்வாய், 15 மார்ச், 2011

கும்பகிரியில் குருமுனியின் தரிசனம்...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு  ,
கும்ப கிரியில் குருமுனியின் தரிசனம்... என்ற தலைப்பை பார்க்கும்போதே வியப்பாக இருக்கும் என நினைக்கிறேன். இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. இருப்பின் பணியின் நிமித்தமாக என்னால் எழுதமுடியவில்லை .

நான் மற்றும் என் இல்லாள் ,எனது சதுரகிரி வழிக்காட்டி ஐயா வெங்கடேஷ் மற்றும் எங்கள் குழுவினர் சதுரகிரியில் தரிசனம் செய்து விட்டு பின் கும்பகிரிக்கு புறப்பட்டோம். இந்த சதுரகிரி சந்திப்பின் போது தான் எனது முறைப்படி திருமணம் (சித்தர்கள் முறைப்படி ) சந்தன மகாலிங்கத்தின் முன்னால் அடைமழையில் நடைப்பெற்றது. அதனை நினைத்தாலே ,அதன் சந்தோசமே தனி தான். சந்தன  மகாலிங்கத்தின் முன்னால் உள்ள ஆகாய கங்கையே பேரருவியாக விழுந்தது. அதனைப்பற்றி இன்னொரு அனுபவ பகுதியில் காண்போம்.  கொட்டும் மழையில் இரவில் இரு வீட்டார்களுக்கும் அமுதளித்தான் அந்த ஆதி சித்தன் . அதனை அப்புறமா பார்ப்போம். 


கும்பகிரிக்கு மதியம் மூன்று மணியளவில் வந்து சேர்ந்தோம், அங்கு அகத்தியரை வழிப்படும் ஒரு ஆசிரமம் உள்ளது. அங்கு வந்தபின் தான் எங்களுக்கு தெரியும்.  அது மட்டுமல்லாமல் அன்று தான் நவராத்திரியின்  முதல் நாள் . வெங்கடேஷ் ஐயா எங்களுக்காக ஒரு சித்தர்கள் யாகம் நடத்தும்படி கேட்டுகொண்டார்.  சித்தர்கள் யாகம் காண கண் கோடி வேண்டும். அவர்களின் பரிபாஷை மொழி கேட்க காதுகள் கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.

எங்கள் அனைவரையும் அகத்தியர் ஆசிரமத்தில் உள்ளோர்கள் வரவேற்று உபசரித்தார்கள். பயண களைப்பு தீர சிறிது நேரம் ஓய்வெடுத்து கொண்டோம். பின் அகத்தியர் ஆசிரமத்தில் உள்ள குருவானவர் ,பக்கத்தில் குருமுனியின் பாதம் பட்ட சிறிய குன்று உள்ளது, அங்கே சென்று அவரை தரிசனம் செய்து விட்டு வாருங்கள் என்று கூறினார்.

அப்போது மணி ஐந்து இருக்கும் அனைவரும் அந்த குன்றுக்கு சென்றோம். அவரின் பாதகமலங்களை கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டோம். எங்களுடன் ஆசிரமத்தை சேர்ந்த அன்பர் ஒருவர் கூட வந்தார், அவர் அக்கோவிலின் பெருமைகளையும் குருமுனியின் பாதத்தையும் காட்டி விளக்கி கூறினார்.
அங்கு ஒரு சிறிய அகத்தியர் கோவில் ஒன்று இருந்தது. ஆனால் அது மூடி கிடந்தது ,விசாரித்தபோது அக்கோவிலை மூடி 3  மாதம் ஆகிவிட்டது என்று அந்த அன்பர் கூறினார். அந்த மாலை பொழுதில் அனைவரையும் அந்த கோவில் ஈர்த்துவிட்டது . ஆனால் கோவிலை திறக்க வழியில்லை .


எல்லாரும் அந்த குன்றின் உள்ள பாறையில் உட்கார்ந்து கொண்டு ,ஆகாயத்தினை பார்த்து கொண்டு இருந்தோம்,  வானில் மேகங்களின் தோற்றத்தில் எண்ணற்ற வர்ண ஜாலங்களை சித்தர்கள் காட்டினார்கள். அதனை எங்கள் புகைப்பட கருவியால்   படம் பிடிக்க முடியவில்லை. 

சரியாக மணி 6 ,என் மனதிலோ எவ்வளவு தூரம் வந்து ,அகத்தியரின் பாதம் பார்த்து விட்டோம் ஆனால் அவரின் கோவில் உள்ள மூலவரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே  என மனம் ஏங்கியது.   வழக்கம் போல் மனதில் குருமுனி அகத்தியரை நினைத்து 
ஐயா கருணை காட்டுங்கள் என்று வேண்டி கொண்டு இருந்தேன்.

அப்போது அங்கு என்ன நடந்தது நாளைய பதிவில் காணலாம்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

6 கருத்துகள்:

 1. அன்புள்ள பாலா, கும்பகிரி என்பது எங்குள்ளது??? எப்படி செல்வது என்று கூறவும்.. நன்றி...

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள சங்கர் குருசாமி ,
  கும்பகிரி, சாப்டூர் கிராமத்தில் உள்ளது, இது சதுரகிரி போகும் வழியில் உள்ளது.

  என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

  பதிலளிநீக்கு
 3. தங்களின் அனுபவ பகிர்வுக்கு வாழ்த்துகள் ...

  மற்றும்,சதுரகிரியில் நடைபெறும் சிறப்பு சித்தர் பூஜைகளை சற்று வரிசைபடுத்தி விளக்கமாக கூறவும்.

  பதிலளிநீக்கு
 4. சாப்டூர் வழியில் உள்ளதா.. சரி அடுத்தமுறை வாய்ப்பு அமைந்தால் பார்த்துவிடுகிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 5. அன்பு பாலா

  உனது அனுபவங்கள் மிக அற்புதம். தொடர்ந்து உனது இறை பணி தொடர சிவனை வேண்டுகிறேன்.

  பெரம்பலூரன்

  பதிலளிநீக்கு