புதன், 2 மார்ச், 2011

நமது சிவஇராத்திரி வாழ்த்துகள்.

அன்புள்ள சிவசி(சு/பி)த்த ஆன்மாக்களுக்கு,

நமது சிவராத்திரி வாழ்த்துகள்.

பல புராண கதைகள் இந்த ராத்திரிக்கு பின்னிபினையப்பட்டு இருக்கிறது. அதைப்பற்றி விவரிக்க, விமர்சிக்க எமக்கு உரிமை இல்லை,  ஆயினும் நமது முன்னோர்கள் வழிவகை செய்த அனைத்து சமய சடங்குகளும் மனிதனின் வாழ்கையின் முன்னேற்றத்திற்கு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமும் இல்லை.

சிவ (சிவனை வழிபட வேண்டிய) இராத்திரி என்பதால் அனைவரும் அருகில் உள்ள கோவிலுக்கோ அல்லது வீட்டில் இருந்தோ அந்த ஆதி சித்தனை வழிபடுங்கள் ( இன்று ஒருநாளாவது ).

உபாவாசம் இருந்து தான் அவனை வழிபடவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எந்தவொரு பெற்றோரும் தம் குழந்தைகள் பட்டினி கிடக்க விரும்புவதில்லை.

அவனை அன்பாலின்றி வேறொரு எந்த வகை முயற்சியினாலும் அடையமுடியாது.

கோவிலுக்கு சென்று முடிந்த வரை, அமைதியாக அமர்ந்து அந்த ஆதி சித்தனை நினைவு கூறுங்கள்.

எல்லாம் வல்ல அந்த ஆதி சித்தன் அனைத்து உள்ளங்களுக்கும் நல்லதொரு வாழ்க்கையை தருவானாக.

நேற்று நான் கூற இருந்த ஒரு மகாமந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதன் பலனை கூறுவதோடு அனுபவித்து பார்த்தால் தான் புரியும்.

எந்தவொரு செயலை செய்யும் முன் இந்த மந்திரத்தை மூன்று முறை மனதால் தியானித்துவிட்டு  செய்து பாருங்கள் (ஆதி சித்தன் அருளிருந்தால் ).

இதற்க்கு விதிவிலக்கு எதுவும் இல்லை,  தூய அன்பு மட்டும் போதும்.

இரவில் படுக்கும் முன்பு கூறுவது ரொம்ப நல்லது. அதைப்போல் படுக்கையில் இருந்து எழுந்திரிக்கும் போதும் கூறுவது சால சிறந்தது.

மந்திரங்களின் தாய் சமஸ்கிரிதம் என்று  எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் . ஆனால் நம் தாய் மொழி தமிழ்  அதையும் தாண்டியது. அதனை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.

தமிழுள்ள சித்த மந்திரங்களை அவ்வளவு  எளிதாக யாராலும் பிரயோகிக்க முடியாது.  அதை உச்சரிக்கவே நாக்கு பயப்படும். உடல் நடுங்கும். 


மகாமந்திரம் :
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.


இம்மந்திரத்தின் மூலம் நான் கண்ட அமான்ஷ்ய சக்திகளை நாளைய பதிவில் காணலாம்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

3 கருத்துகள்:

  1. இது மாணிக்கவாசகரின் பாடலா? உங்களின் கருத்து சரியாகத்தான் உள்ளது.

    இது கொஞ்சம் வித்தியாசமான மந்திரமாகத்தான் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள சிவனருள் ,

    இந்த மந்திரம் , சேக்கிழார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.

    இது இறைவனே(சிவனே) எடுத்து கொடுத்த பாடலாகும் . சிவனடியார்களின்

    வாழ்க்கையை சொல்லும் பெரியபுராணத்திற்கு இது தான் காப்பு ஆகும்.

    அப்படி பட்ட மந்திரம் நம்மை காக்காத என்ன ? இந்த மந்திரத்தை சொல்வதின் மூலம் அனைத்து நாயன்மார்களின் அருளினையும் பெறவும் வாய்ப்பு உள்ளது.

    முயற்சி செய்து பாருங்கள் ,உங்களின் அனுபவத்தை நீங்களே உணர்வீர்கள் .

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  3. Bala, Thanks for sharing. Will chant and try..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு