செவ்வாய், 1 மார்ச், 2011

எமது சிவ பயணத்தில்....


அன்புள்ள சித்த நெஞ்சங்களுக்கு  ,

எமது வாழ்க்கையில் நடைப்பெற்ற சம்பவங்கள் , எமக்கும் அந்த சிவனுக்கும் நடைப்பெற்ற  உரையாடல்கள் எத்தனை எத்தனையோ !
ஆனால் எல்லா போட்டிகளிலும் ஆதி சித்தனே வெற்றிபெற்றான் . 
ஆகையால் தான் நான் அவனுக்கு(அவருக்கு) அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டேன்.

நாம் வாழும் இந்த கலியுகத்தில் இது சாத்தியாமா ?சாத்தியம் என்றால் அது எப்படியாகும் ?

நம்மால் இறைவனை சந்திக்க முடியுமா ? அப்படி சந்தித்தால்
நமது மன நிலை எப்படி இருக்கும் ,அதே வேலையில் மற்றவருடைய மன நிலை எப்படி இருக்கும் ?

நம் இல்லத்திருக்கு அவன் தேடி வருவானா ? அப்படி தேடி  வந்தால்
அவன் நம்மிடம் வந்து என்ன கேட்பான் ?


மேற்கண்ட கேள்விகளை பார்க்கும்போது ,பிரமிப்பாகவும் இருக்கும் , சில சமயங்களில் கேலி கூத்தாகவும் இருக்கும்.

எமது அனுபவதிருக்கு நான் மட்டும் அல்ல எம்மை சுற்றியுள்ள நண்பர்களும் இன்று வரை சாட்சியாக உள்ளார்கள், நடைபெற்ற நிகழ்வுகள்
அனைத்தும் காகபுசன்டரின் ஓலை சுவடியுளும் வந்துள்ளது(எம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது) .


ஆனால்,இன்று அதையும் தாண்டி அவனருளால் சித்தர்களின் பாதகமலங்கலுக்கு வழிபாடு(மன) செய்வதால் .எதையும் வெளிச்சொல்ல மனம் விரும்புவதில்லை. ஆயினும் யான் பெற்ற சில நல்ல நிகழ்வுகளை உங்களுடன் பரிவர்த்தனம் செய்துகொள்ள முயற்சிக்கிறேன்..

நாளை ஒரு மிக அருமையான மந்திரத்தை உங்களுக்கு கூறுகிறேன்.
இந்த மந்திரத்தை வைத்து கொண்டு சாமியாடும் பெண்களை கட்டுபடுத்தலாம் .  தெய்வதிருக்கு எதிரியாக செயல்படும் அனைத்து தீய சக்திகளையும் முறியடிக்கலாம். உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள முடியும்.

"மந்திரம் கால் மதிமுக்கால் "

உங்களுக்கு மனவேகம் , மனதைரியம் இருந்தால்....முயற்சித்து பாருங்கள்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

5 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பா ,
    "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
    தங்களின்,நாளை புதுமையான பதிவின் விடியலுக்கு இன்றே எதிர் நோக்கும் நண்பன் ....
    நண்பா தங்களிடம் 1 கேள்வி ? தாங்கள் எந்த மார்கத்தை தழுவிகிறீர்கள்?
    சரியை - கிரியை - யோகம் - ஞானம் ......
    நன்றி...
    தங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
    என்றும்..நட்புடன்
    chakra....
    http://shivasiddhargal.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள நண்பா ,

    தங்களின் வருகைக்கு நன்றி,

    நான் கடந்து வந்த பாதையை தான் இங்கு எழுதுகிறேன்,
    தற்சமயம் நான் ஞானம் பாதையில் சென்றுகொண்டு இருக்கிறேன்.

    எவ்வாறு இவ்வுலகில் குழந்தையாய் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடிகிறோமோ அதுப்போல் தான் இந்த ஆன்மிகமும்.

    தங்களுக்கு புரிந்து இருக்குமென்று நினைக்கிறேன்.

    "யாம் எந்த நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்று".


    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. உங்களின் பதிவு என்னை கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது. நீங்களாவது தெளிவாக உள்ளீர்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்று. ஆனால் என்னால் தெளியவே முடிவதில்லை. எனக்கு பல நிகழ்வுகளை நிகழ்த்தி உள்ளான் அந்த சிவசித்தன் முதல் சித்தன்.

    ஐயா இப்படி வாழ்க்கையில் அவன் வ்ந்து நம்மை வழி நடத்தி உள்ளான் எனும்போதே...அடடா...அடடா..... அது போதுமயா எனக்கு.....

    பதிலளிநீக்கு
  5. Dear Bala, Egerly waiting for your post.

    Thanks

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு