மந்திரங்களைப்பற்றி தற்சமயம் நான் கொண்டுஇருக்கும் எண்ணம் வேறு, இருப்பினும் நான் கடந்து வந்த பாதையை தான் இங்கு எழுதுகிறேன், "
"யாரும் தவறாக என்னை எண்ண வேண்டாம். "
எமக்கு கிடைத்த அமான்ஷ்ய சக்தியைப்பற்றி எழுத முயற்சித்த போது, பல தரப்பட்ட பழைய நினைவுகள் எம்மைசுற்றிசுற்றி வந்து.. ஒரு மாதிரியாகி போய்விட்டது. சித்தர்களின் உத்தரவு கிடைக்கவில்லைபோலும் என உள்மனது கூறுகிறது.
இருப்பினும், எம் வாழ்வில் அந்த ஆதி சித்தன் எம்மை தேடி வந்ததை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
இது நடந்தது 2004 ம் ஆண்டு.
எங்கள் ஊரில் உள்ள சிவனாலயம் மிகச்சிறப்பு வாய்ந்தது. கைலாசநாதர் மற்றும் காமாட்சி அம்மனுடன் உள்ள ஒரு சின்ன கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்ப்பட்டது , சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இது விளங்கியது .
சதா காலம் சிவனின் திருவிளையாடல்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்ததொரு காலம்( வேலை வாய்ப்பு இல்லாததனால் ) . நன்று படித்தும் ,வேலை கிடைக்காத விரக்தியால் ஆன்மிகத்திற்கு ஈர்க்கப்பட்ட காலம் அது. எமது நண்பர்கள் ஈசா யோகத்தில் பயிற்சி பெற்றவர்கள் நானோ எதுவும் தெரியாத ஆனால் சிவன் மேல் மட்டும் பித்து கொண்டவனாக இருப்பவன். பல நல்ல ஆத்மாக்களின் நட்புறவு கிடைத்தால் எங்கள் மனம் எப்போதும் சிவனை நோக்கியும் , சத்சங்கத்திலும் இருக்கும்.
அன்று தான், வாழ்க்கையின் மிக சிறந்த நாளாக கருதுகிறேன், எம்மை எம்பெற்றோர்கள் இந்த தரணிக்கு அறிமுகப்படுத்திய(பிறந்தநாள்) நாளாகும்.
வழக்கம் போல் எல்லாரும்( நண்பர்களுடன் ) சாயங்காலம் கோவிலுக்கு சென்றோம். எப்போதும் எம் தந்தையை சுத்த தமிழால் அர்ச்சனை செய்வது வழக்கம். அன்றும் அதுப்போல் நடந்தது. அந்த அர்ச்சனைக்கு நிகர் இந்தவுலகில் எதுவும் கிடையாது . அவனே வந்து வழிய கேட்கும் மந்திரம் அது . இதனை பல இடங்களில்( இமய மலையிலும் கூட) பரிச்சித்து பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.
மனதில் எம்தந்தை நினைத்து , பின்வருமாறு கூறினேன்.
ஐயா,
எனக்கு இன்னைக்கு பிறந்த நாள், வாழ்த்து சொல்ல எல்லாரும் வந்தார்கள் உம்மை தவிர.
என் மேல் உங்களுக்கு எண்ண கோபம், என்னை ஏன் வந்து பார்க்க மாற்றிங்க ,இருந்தாலும் நீங்க ரொம்ப பெரியவங்க , உலக மக்களை காக்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. இருப்பினும் இந்த பிள்ளையை பார்க்க ஒரு முறை வாங்க என்று கூறினேன், உங்களால் நேரில் வர முடியலனா கூட பரவாயில்லை கனவிலாவது வாங்க என்று கூறினேன்,
பிரார்த்தனை முடிந்து , என் நண்பர்களிடம் கூறினேன் , இன்று எம் தந்தை எம்மை பார்க்க வருவார் என்று.
எல்லாரும் சிரித்தார்கள் , இந்த சிலை (சிவலிங்கம்) எப்படி வரும் என்று நன்றாக நக்கலடித்தார்கள் . என் மனமோ சித்தனை நோக்கி , அப்பா இவர்களுக்கு நல்ல என்ணத்தை கொடுக்க வேண்டும் , அதுக்காவது வாங்க என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன் .
இது கதை அல்ல , நடந்தது என் வாழ்வில் ...
சித்தன் வந்தானா ? கனவிலா இல்லை நினைவிலா --
நாளைய பதிவில் பார்க்கலாம்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
Dear Bala,
பதிலளிநீக்குI appreciate your guts in writting these experiences...
Definitely Lord will Bless you with his Best...
Keep Posting.
htp://anubhudhi.blogspot.com/
வணக்கம் நண்பா ,
பதிலளிநீக்கு"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
நல்ல தருணத்தில் நல்ல முடிவு ...தங்களின் அருமையான அனுபவபகிர்வில், நானும் இதை படித்து தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்....
நன்றி...
தங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
என்றும் நட்புடன்
chakra....
http://shivasiddhargal.blogspot.com/