அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
எனது முதல் சதுரகிரி யாத்திரையின் போது ஏற்பட்ட அனுபவத்தின் ஒரு சிறிய நிகழ்வினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
அன்று ஆடி அமாவாசை ,ஏறக்குறைய பதினைந்து லட்சம் மக்கள் பங்கேற்ற ஒரு சிறப்பு வாய்ந்த நாள் அதுவாகும். நானும் என் நண்பன் சக்கரவர்த்தி மற்றும் என் தம்பி ராஜா ஆகியோர் சதுரகிரிக்கு சென்றோம் , அன்றைய இரவில் நாங்கள் கேள்விப்பட்டவை எங்களால் நம்பமுடியவில்லை , ஏனென்றால் நட்சத்திரங்கள் வந்து சதுரகிரியாருக்கு பூஜை செய்யும் என்றும். ஆகையால் யாவரும் உறங்காமல் நள்ளிரவு 12 மணி வரை விழிப்புடன் இருந்தோம் . ஆனால் எங்களால் தூங்காமல் இருக்க முடியவில்லை . எல்லாரும் நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டோம் , விடியற்காலையில் எல்லாரும் பேசிகொண்டார்கள் அருமையான வான விளையாட்டை சித்தர்கள் செய்து காட்டினார்கள் என்று , இதனை கேள்விப்பட்ட நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம் .
எல்லாம் அவன் செயல் என நினைத்துகொண்டு அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு வந்தடைந்தோம். அங்கிருந்து நாங்கள் பெங்களுருக்கு புறப்பட தயாராக இருந்தோம். அப்போது ஒரு நபர் எங்களுக்கு அறிமுகமானார்.
பேருந்தில் நாங்க அனைவரும் ஒரே இருக்கையில் உட்கார்ந்து கொண்டோம். பிறகு அந்த நபர் எங்களுக்கு முன்னால் இருக்கையில் உட்கார்ந்து இருந்தார் .
வழக்கம் போல எங்கள் சத்சங்கம் ஆரம்பமானது , நாங்கள் தவறவிட்ட அந்த வான ஜால வித்தையை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.
இருப்பினும் என்னால் நம்ப முடியவில்லை ,எப்படி நட்சத்திரம் வந்து போகும் என்று விவாதம் செய்து கொண்டு இருந்தோம். அப்போது அந்த நபர் , நீங்கள் நம்ப தயாராக இல்லையென்றால் ,அதை நான் நிருபிக்கிறேன் என்று கூறினார்.
எங்களுக்கு ஆர்வம் அதிகம் ஏற்பட்டு ,எங்கே காட்டுங்கள் என்று கூறினோம் , அப்போது அவர் அவருடைய காமெராவை எடுத்து அந்த நட்சத்திரங்களின் வான ஜாலத்தை காட்டினார் , எல்லாருக்கும் ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது அதனைப்பார்க்கும்போது .
அதனைவிட ஆச்சர்யம் என்னவென்றால் , அந்த வீடியோவை நன்றாக ஜூம் பண்ணி பார்த்தால் , இரண்டு நட்சத்திரங்களும் வெவ்வேறு வடிவை கொண்டிருந்ததது .
ஒன்று பாம்பு போலவும் , மற்றொன்று வேல் போன்றவும் தோற்றமளித்தது.
அதற்குபின் ,அவர் கூறினார் , இவ்விரண்டு நட்சத்திரங்களும் முறையே அகத்தியர் மற்றும் போகர் எனவும் கூறினார். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரண்டு நட்சத்திரங்கள் தோன்றி சதுரகிரியாரை வழிப்பட்டு பின் திருச்செந்தூர் செல்வதாக ஐதீகம் என்று கூறி எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
அதற்குபிறகு தான் , நாங்கள் எங்களை அறிமுகபடுத்தி கொண்டோம், பின் அவர் தம் பெயரை வெங்கடேஷ் என்று கூறி அவரின் அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார் .
அவரின் எல்லா அனுபவங்களுக்கும் அவரிடம் சான்று உள்ளது. சதுரகிரியின் சந்தனத்தைப்பற்றி அவர் ஒரு அனுபவ நூல் எழுதிக் கொண்டு இருக்கிறார்.
நாங்கள் அனைவரும் சேலம் வரும்வரை அவரிடம் நன்றாக பேசிகொண்டு சதுரகிரியின் பல ஆச்சர்ய தகவல்களை தெரிந்து கொண்டோம் .
என் மனைவிக்கு தீராத தலைவலி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் இருந்தது .
எல்லா மருத்துவர்களும் முயற்சி செய்தும் ஒன்றும் குணமாகவில்லை என்று அவரிடம் கூறினேன் . அப்போது அவர் தம் பையில் இருந்து கொஞ்சம் பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனத்தை கொடுத்து இதனை உன் மனைவிடம் கொடு. மற்றவற்றை அந்த சதுரகிரியார் பார்த்து கொள்வார் என கூறினார்.
சேலம் வந்தது, அனைவரும் விடைப்பெற்றுக்கொண்டு சென்றுவிட்டோம்.
தற்சமயம், நாங்கள் எல்லாரும் அவரை "சேலம் சதுரகிரியார்" என்றே அழைப்போம்.
பிறகு என்ன நடந்தது என்று அடுத்த பதிவில் காண்போம்.
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

வணக்கம் நண்பா ,
பதிலளிநீக்கு"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
ஆதி குருவையும் , மூல குருவையும் தாங்கள் தரிசித்தது மட்டும் அல்லாமல், எங்களுக்கும், அதை கேட்டு மனக்கண்ணால் தரிசிக்கும் பாக்கியத்தை தந்ததற்கு உங்களுக்கும் , மேன்மை பொருந்திய வெங்கட் அய்யா அவர்களுக்கும் நன்றி.
தங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
என்றும்..நட்புடன்
chakra....
http://shivasiddhargal.blogspot.com
எனக்கும் ஆசைதான் சதுரகிரி செல்ல இன்னும் முடியவில்லை. ஈசன் அருள் என்று கிட்டுமோ அந்த புனித மலையில் என்று தரிசனம் காண்பேனோ?
பதிலளிநீக்குமிக நல்ல தகவலை பகிர்ந்துள்ளிர்கள். நன்றி
திருசிற்றம்பலம்
சிவனருள் பதிவன்