அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,
பணியின் நிமித்தமாக என்னால் கடந்த 2 நாட்களாக பதிவுகளை பதிவு செய்யமுடியவில்லை .
சிவவாக்கியரின் பாடலில் உள்ள கருத்துகள்.
தான் ஞான நிலையை அடைவதற்க்கு முன்னால் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தேன் என்று புலம்புவதாக இங்கு அமைந்துள்ளது.
தான் ஞான நிலையை அடைவதற்க்கு முன்னால் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தேன் என்று புலம்புவதாக இங்கு அமைந்துள்ளது.
இந்த உலகில் நான் பல வகையான மலர்களை பறித்து அதனால் இறைவனை அர்ச்சித்து என்ன பயன் கண்டேன்?
இந்த உலகில் நான் பல வகையான மந்திரங்களை செபித்து அதன் மூலம் என்ன பயன் கண்டேன் ?
இந்த உலகில் நான் இறைவன் மேல் கொண்ட பக்தியினால் அவன் மீது மோகம் கொண்டு பல வகையான புண்ணிய நதி நீர்களினால் அவனை அபிசேகம் செய்து என்ன பயன் கண்டேன் ?
அவனின் அருள் வேண்டும் என்று பல சிவத்தலங்களை சுற்றி வந்து என்ன பயன் கண்டேன்?
இந்த உலகினை கட்டிக்காக்கும் ஈசனின் உண்மையான இருப்பிடத்தை அறிந்த ஞானிகள் , அவனின் சிறப்பு வாய்ந்த தன்மையை அறிந்ததால் உண்மையான பரம் பொருளினை மட்டும் வணங்குவார்கள். அவனின் இருப்பிடத்தை அறிந்து உணர்பவர்கள் அனைவரும்
கண்ட கோவில்களை வணங்க மாட்டர்கள்.

இங்கு கண்ட கோவில் என்பது , மூலைக்கு மூலை எங்கு பார்த்தாலும் நகரங்களில்
பல வகையான சிறிய கோவில்களை கட்டிகொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒன்று இருக்கும். எந்த கோவிலை பார்த்தாலும் நமது கைகள் அந்த ஆலயத்தை நோக்கி மனமார பிரார்த்திக்கும். ஆனால் உண்மையான ஆலயத்தை உணர்ந்தவர்கள்
அவ்வாரு செய்யமாட்டார்கள் என்பது அவரின் கருத்து.

ஊணுக்குள் உள்ளொளியை பார்க்க வேண்டும் ,உண்மையான இருப்பிடத்தை காட்டவல்லவர்களே ஞானிகள் என்று தெளிவுபட கூறுகிறார்.
சிவவாக்கியரின் பாடல்கள் அனைத்தும் மக்களுக்காக எழுதப்பட்டவை .
கீழ்க்கண்ட பாடலினால் என் மனது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதனை எழுதிய பின் 2 நாட்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மட்பாண்டங்கள் உடைந்தால் கூட அதனை தேவை என்று மக்கள் எடுத்து அடுக்கி வைத்துக்கொள்வார்கள்.

வெங்கலத்தினால் செய்த பாத்திரங்கள் கீழே விழுந்து நசிங்கனாலோ அல்லது உடைந்தாலோ அதனையும் கூட வேனுமென்று எடுத்து வைத்து கொள்வார்கள்.
ஆனால் மாபெரும் சக்தி வாய்ந்த இந்த மானுடல் இறந்த போது நாறுமென்று தூக்கி வீட்டுக்கு வெளியே வைப்பார்கள். இதன் மூலம் என்னில் நீ இருந்து கொண்டு செய்யும் மாயம் என்ன மாயம் ஈசனே என்று கேட்கிறார்.
இந்த உடலின் மதிப்பு மட்பாண்டங்களுக்கு உள்ள மதிப்பு கூட கிடையாது( உயிர் பிரிந்தால்).
உயிர் = ஈசன்= அருட்பெருஞ்சோதி=அல்லா=ஏசு.
கடந்து உள்ளே பாருங்கள்( கட + உள்ளே ) = கடவுள்.
கடம் + உள் = கடவுள் ( கடம் = உடம்பு ,உடல்).
இதனையே பட்டினத்தார் பின்வருமாரு கூருகிறார் .
என்னை யறியாமா லெனுக்குள்ளே நீயிருக்க
உன்னை யறியாமால் உடலழிந்தேன் பூரணமே !
வானென்பார் அண்டமென்பார் வாய் ஞான மேபேசித்
தானென்பார் வீணர் தனையறியார் பூரணமே!
பத்திரகிரியாரின் கருத்து...
மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ் நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம்!
ஒளியிட்ட மெய்ப்பொருளை உள்வழியிலே யடைத்து
வெளியிட்டுச் சாத்திவைத்து வீடுறுவ தெக்காலம் !
என்னை யறியாம லிருந்துதாட்டுஞ்ச் சூத்திர நின்
றன்னை யறிந்து தவம்பெறுவ தெக்காலம் !
என்னைவிட்டு நீங்காமல் என்னிடத்து நீயிருக்க
உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம் !
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை

உள் கட உள் கட என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தால் கடவுள் என்றாகிவிடும் . இது படஈனத்தர்ரின் வாக்கு
பதிலளிநீக்குஅனைத்து சித்தர்களின் செயல்களும் ஒன்றே என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒன்றாக இருக்க முடியுமா என்பதிலும் சந்தேகமே .
சரி என்னுடைய கருத்து.
கடவுள் ஊனுள்ளேதான் இருக்கிறார் அவரை கண்டுபித்த பின்னும் அவரின் கட்டளைப்படிதானே அவர்கள் முக்தி அடைந்திருக்கிறார்கள்.
பட்டினத்தாருக்கு சிவன் உபத்தேசித்ததுதான் "காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே" அதன் பின்தான் அவர் துறவறம் மேற்கொண்டார்.
பேய் கரும்பு இனிக்கும் நாள்தான் உனக்கு முக்தி என்று சொன்னார் அந்த சிவன். அதன்படியே பட்டினத்தார் அந்த நாளன்று முக்தி அடைந்தார். இதில் சித்தர் படினத்தார் கடவுளை அறிந்திருந்தார் ஆனாலும் அவரை வழி நடத்தியவர் அந்த ஆதிநாதன். எத்தனை சிவாலயங்களை கடந்து திருவேன்கட்டில் பல காலம் கடந்து பிறகு திருவெற்றியூர் வந்து முக்தியானர்.
நான் என்ன கேட்க வருகிறேன் என்று உங்களுக்கு புரிந்தால் பதில் சொல்லுங்கள், தவறாக இருந்தால் சொல்லுங்கள். என்னுடைய மனதில் தோன்றியதை சொல்லி உள்ளேன் அவ்வளவே
திருசிற்றம்பலம்
சிவனருள் பதிவன்.
மிகத்தெளிவான,
பதிலளிநீக்குபாடலின் சாரத்திற்கு குறையல்லாத விளக்கம் .
அன்புள்ள சிவனருள் ஐயா ,
பதிலளிநீக்குதங்களின் கருத்து மிகச்சரியே . ஆனால் அந்த ஆதி நாதன் வேறு நாம் வேறு என்ற எண்ணம் வராமல் இருந்தால் அதுவே முக்திக்கு வழியாகும்.
பட்டினத்தாரின் பூரண மாலையை தயவு செய்து படித்து பார்க்கவும். இது கொஞ்சம் கடினமான பாதை தான் .இருப்பினும் அந்த ஆதி நாதனின் மேல் பாரத்தை போட்டுவிட்டு பின்பற்ற ஆரம்பியுங்கள் .
அவனின்றி அவன் தாள் வணங்க முடியாது .
அவனருளின்றி அவனையும் அறிய முடியாது .
ஊனுக்குள் நீநின் றுலாவினத்தைக் காணமல்
நானென் றிருந்து நலமழிந்தேன் பூரணமே. .
தாயாகித் தந்தையாய் தமர்கிளைஞர் சுற்றமெல்லாம்
நீயாகி நின்ற நிலையறியேன் பூரணமே .
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
thanks:)
பதிலளிநீக்குஅந்த இடத்தில்தான் என்னை ரொம்ப குழப்பி தெளிவ குடுக்கிரமாதிரியும் இருக்கு குடுக்காத மாதிரியும் இருக்கு. சரி எல்லாம் அவன் செயல் சிவமே சிவமயம் அவனா என்னைக்கு தெளிவா தெளிய வைக்குரன்னு பாப்போம். பூரண மாலை நுள் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் உதவியாக இருக்கும். தங்களின் தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குதிருசிற்றம்பலம்
சிவனருள் பதிவன்
அன்புள்ள சிவனருள் ஐயா ,
பதிலளிநீக்குதாங்கள் குழப்பமே அடைய தேவையில்லை ,
தாங்கள் தற்சமயம் தான் சித்தர்களின் பார்வைக்குள் வந்து கொண்டு இருக்கிறீர்கள் . அந்த ஆதி சித்தன் வேறு சிவன் வேறு அல்ல.
உங்களுக்கு கூடிய விரைவில் தெளிவு கிடைக்கும்.
"பட்டினத்தார் பாடல்கள்" என்று பல வகையான நூல்கள் வந்துவிட்டது.
இருப்பினும் தாங்கள் பெரிய ஞானக்கோவை நூல் வாங்கிகொண்டால்
அனைத்து சித்தர்களின் பாடல்களும் கிடைக்கும். அதில் பூரண மாலை இருக்கிறது.
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
http://www.projectmadurai.org/pmworks.html
பதிலளிநீக்கு(Some of the siddhar poems are available here, including pattinathar songs)