வியாழன், 31 மார்ச், 2011

அகத்தியர் ஞானம்‍ 9ல் 3


அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு,

பாட‌ல்:3

பார‌ப்பா நால்வேத‌மும் நாலும் பாரு 
    ப‌ற்றாசை வைப்ப‌த‌ற்கோ பிணையோகோடி;
வீர‌ப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி
   வீணிலே ய‌வர் பிழைக்குச் செய்த‌ மார்க்க‌ம்
தேர‌ப்பா தெருத்தெருவே புலம்பு வார்க‌ள்
   தெய்வ‌நிலை ஒருவ‌ருமே காணார் காணார்
ஆர‌ப்பா நிலைநிற்க‌ப் போறா ரையோ!   
   ஆச்ச‌ர்ய்ங் கோடியிலே யொருவ‌ன் தானே.

விள‌க்க‌ம்: விளக்கம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லையென்றாலும் , எனக்குத்தெரிந்த கருத்துகளை தான் உங்கள் முன்னிலையில் வைக்கிறேன். தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும்.

நான்கு வேத‌ங்க‌ளையும் பார்க்கும்போது அவ‌ற்றை எழுதியவர்க‌ள் மிக‌ச்சிற‌ந்த‌ ரிஷிக‌ள் ம‌ற்றும் முனிவ‌ர்க‌ள் ஆவார்கள். ஆனால் இவை அனைத்தும் ப‌ற்றாசை வைப்ப‌த‌ற்க்கு உதவும் என‌வும், ந‌ல்ல‌து என‌வும் தீய‌து என‌வும் கூறி அவ‌ர‌வ‌ர் பிழைப்ப‌த‌ற்குச் அவர்(ருத்திரன்) ஏற்ப‌டுத்தி கொடுத்த‌ மார்க்கம் இதுவாகும். உல‌கில் மனிதன் இய‌ற்கையோடு இய‌ற்கையாக வாழ்ந்த போது  அவனுக்கு எந்த‌வித‌ வேத‌மும் தேவைப‌ட‌வில்லை. நாள‌டைவில் நாகரீக‌த்தின் போர்வையில் அவன் வந்தபோதுதான் போட்டிகள், பொறாமைக‌ள் மற்றும் களவு போன்றவை ஏற்ப‌ட்ட‌போது தான் உலகில் நீதி ம‌ற்றும் தர்ம‌ம் தோன்றிய‌து. அத‌ன்பின் தான் வேத‌ உப‌நித‌ட‌ங்க‌ள் தோன்றிய‌து.

தாங்க‌ள் இய‌ற்றிய‌ நூல்க‌ளை கொண்டு தெருத்தெருவே புல‌ம்புவார்க‌ள் ஆனால் உண்மையான‌ தெய்வ‌த்தை அவர்கள் அறிய‌மாட்டார்கள் எனவும். இந்த உலகில் யாருமே நிலையாய் இருக்க போவதில்லை  எனவும், இருப்பினும் தெய்வ‌ம் என்ற‌ த‌த்துவ‌த்தை எவ‌ன் ஒருவ‌ன் உணர்கிறானோ அவ‌னே நிலையாய் நிற்பான் என‌வும், அவ‌ன் கோடியில் ஒருவ‌ன் தான் இருப்பான் என‌வும் கூறுகிறார்.

கொஞ்ச‌ம் க‌டின‌மான பாதை தான்.....


என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

3 கருத்துகள்:

  1. பாலா, உங்கள் விளக்கமே பொருத்தமாகத்தான் இருக்கிறது. அருமையான பதிவு.

    பகிர்வுக்கு நன்றி.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொன்னதும் நான்றாய் இருக்கிறது. இதோ எனக்கு(ள்) வந்தது. தவறாய் இருப்பின் மன்னியுங்கள்...

    ... பாரப்பா நால்வேதம் என்பார்கள் அந்த நாலையும் பாரு, பற்று வைப்பதற்கும், ஆசை வைப்பதற்கும் அதில் பிணைப்பகளாக விசயங்கள் பிண்ணப்பட்டிருக்கின்றன. வீரம் என்று ஒவ்வொன்றாக மாற்றி, மாறிக் வீணாக அவர்கள் பிழைக்க செய்த வழியப்பா அது. மனதை தேற்றிக்கொண்டு கல்லையும் கட்டையையும் தெய்வம் என்று புலம்பியே, தெய்வத்தின் உண்மை சொரூபத்தை ஒருவரும் காணாமல் போனார்கள். யார்தான் நித்தியம் என்ற வத்துவில் நிலையாக நிற்கப் போகிறார், அய்யோ ! அது ஆச்சரியம், கோடியிலே ஒருவன்தான்(னே) ...

    நட்புடன்
    தேவன்.

    பதிலளிநீக்கு
  3. /// நான்கு வேத‌ங்க‌ளையும் பார்க்கும்போது அவ‌ற்றை எழுதியவர்க‌ள் மிக‌ச்சிற‌ந்த‌ ரிஷிக‌ள் ம‌ற்றும் முனிவ‌ர்க‌ள் ஆவார்கள்.///

    இது கொஞ்சம் நெருடல்...

    பதிலளிநீக்கு