அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
நேற்றைய தொடர்ச்சி...
மணி சரியாக 6 . அப்போது வெங்கட் ஐயா, என் மனைவியை அழைத்து தீபம் ஏற்ற சொன்னார். தீபம் ஏற்றும் போது காற்று பலமாக வீசியது. இருப்பினும் 3 முறை முயன்று ,இறுதியில் தீபம் ஏற்றப்பட்டது.
எல்லாரும் மனமார அகத்தியரை வணங்கிணோம். இருப்பினும் என் மனதில் ஒரே குறை ,மூலவரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று.
ஆலயத்தில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் எரியவில்லை ஏனென்றால் , ஆலயத்தை மூடி 3 மாதமாகிவிட்டது. வெங்கட் ஐயாவிடம் மெதுவாக நான் சென்று எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க என்றேன். ஆலயத்தை உற்றுப்பார்த்தால் ஒரே இருட்டாக இருந்தது.
பின் மனதில் உறுதிக்கொண்டு ,
குருவே சரணம் ,
சத்தியமே அகத்தியம்,
என்ன ஒரு ஆச்சர்யம், ஒரு சின்ன ஒளி கீற்று மூலவரை நோக்கி வந்தது. அது மெர்க்குரி வெளிச்சம் போல் இருந்தது. எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. நன்றாக உற்றுப்பார்த்தேன்.
குருவே சரணம் என்று கூக்குரலிட்டேன். எல்லாரும் ஓடி வந்துப்பார்த்தார்கள் . அனைவருக்கும் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. எங்கள் அனைவராலும் மூலவரை நன்றாக பார்க்க முடிந்தது.
அகத்தியர் ஆசிரமத்தில் இருந்து உடன் வந்தவர் ஓடிச்சென்று ,மின்சாரம் ஏதாவது நின்றுப்போய் வந்ததா எனப்பார்த்தார் . ஆனால் அப்படி ஒரு நிகழ்வு எதுவும் நிகழவில்லை அதே நேரம் எல்லா சுவிட்சுகளும் ஆப் செய்யப்பட்டுள்ளது ஏனென்றால் கோவிலை மூடி 3 மாதமாகிவிட்டதால் அதற்க்கும் வாய்ப்பு இல்லை என உணர்ந்தோம். அதன் பின் எல்லாரும் தியானம் செய்ய போய்விட்டோம் .
பொழுது இருட்டாக ஆரம்பித்தது. அனைவரும் எனக்காக காத்திருந்ததனர். பிறகு தியானத்தை முடித்துவிட்டு புறப்பட சென்றோம். அப்போது நான் எல்லார் முன்னிலையிலும்
"அகத்திய குருவே நீர் உண்மை"- என்பதை உணர்த்திவிட்டீர், மிக்க நன்றி, நாங்கள் புறப்படுகிறோம் என்று கூறினேன். அதுவரை இருந்த அந்த ஒளிக்கீற்றானது எல்லார் முன்னிலையிலும் மெதுவாக மறைந்தது அந்த நேரத்தில் எங்களுக்கு எதுவுமே ஒன்றும் புரியவில்லை.
அந்த ஒளியானது மெதுவாக மறைந்துபோனது மீண்டும் ஆலயத்தை இருள் சூழ்ந்தது. இதன் மூலம் நான் கண்டு கொண்ட உண்மை என்னவென்றால்
"தரிசனம் என்பது கோவில் பூட்டிக்கிடந்தாலும் கிடைக்கும்" என உணரப்பெற்றேன்.
இன்று நினைத்துப்பார்த்தாலும் அந்த தரிசனம் எங்கள் நினைவில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது.
குருமுனியானவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே உண்மை.

அகத்தியமே சத்தியம் --என்று மனமுறுக குருவை நோக்கி பிரார்த்திதேன்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
வணக்கம் நண்பா ,
பதிலளிநீக்கு"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
ஆதி குருவின் அற்புதங்களை அனுபவிப்பது மற்றும் கேட்பது தான் பேரின்பம்....
நன்றி...
தங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
என்றும்..நட்புடன்
chakra....
http://shivasiddhargal.blogspot.com
அன்புள்ள பாலா, உண்மையில் தங்கள் அனுபவத்தைப்படித்துவிட்டு மெய் சிலிர்க்கிறது...
பதிலளிநீக்குதொடரட்டும் தங்கள் சித்தர் பணி...
http://anubhudhi.blogspot.com/
உங்களின் இந்த அனுபவம் சித்தர் திருவிளையாடலாக உள்ளது பூர்வ புண்ணிய பலன்கள் உங்களுக்கு மேலோங்கி உள்ளது அது மட்டுமில்லாமல் இந்த கலியுகத்தில் நிங்கள் சிறந்த பக்திவாதியாக உள்ளீர்கள்.
பதிலளிநீக்குஎப்பேர் பட்டவரும் உண்மையாக நினைத்து மனமுருகி வேண்டினால் எந்த தெய்வத்தின் தரிசனத்தையும் காணலாம். அதற்கு அவர் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதில்லை இருந்த இடத்திலேயே காணலாம். அனால் அதற்கு பல நிலைகளை தண்ட வேண்டும்.
உங்களின் ஒவ்வொரு அனுபவமும் சிவ லிலையாக உள்ளது.
தெய்வ நிகழ்வுகள் என்றுமே மறக்கக்குடியவை அல்ல. தொடருந்து இன்னும் பல நிகழ்வுகளை பகிரவும்.
அன்புடன்
சிவனருள் பதிவன்
என்ன சித்தரே! உங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விட்டீரோ? வாழ்க நீவீர். வாழ்க நின் குலம். தங்கள் ஆன்மீக பணி சிறப்புற அடியேன் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புள்ள ஐயா ,
பதிலளிநீக்குதாங்களின் ஆசியினால் தான் இந்த அடியேன் இன்றும் வாழ்ந்து ,வளர்ந்து கொண்டுஇருக்கிறேன் . தங்களின் நீங்கா நினைவுகள் என்றும் என்னுடன் இருக்கும் .
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை
தங்கள் ஆன்மீக பணி சிறப்புற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு