வெள்ளி, 25 மார்ச், 2011

சதுரகிரியின் சந்தன மகிமை -அனுபவம் -2

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
கடந்த பதிவில் கூறியபடி,
சந்தனத்தை நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அனுப்பி வைப்பதற்க்கு தற்சமயம் என்னிடம் சந்தனம் மிக குறைவாக இருக்கிறது.

எங்களுடைய வழிக்காட்டி ஐயா வெங்கட் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வருகின்ற அமாவாசைக்கு அப்புறம்
தேவைப்பட்டவர்களுக்கு அவரே அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்.

எத்தனையோ பணிகளுக்கு இடையிலும் அவர் தொடர்ந்து சந்தனத்தின் மகிமையை தமக்கு தெரிந்த அன்பர்களிடம் கூறி
அதனால் பலருக்கும் நல்லதொரு நோயற்ற வாழ்வினை ஏற்படுத்தி தந்துள்ளார்.

எனக்கு சதுரகிரி யாத்திரையின் வழிக்காட்டியும் ,எமக்கு திருமணத்தை சதுரகிரியில் நடத்தி தந்த பெருமையும் அவரையே சாரும்.
கலியுகத்தில் அவரைப்போன்ற வழிக்காட்டிகளைப்பெற்றது எங்களது புண்ணியம் என்றே நாங்கள் கருதுகிறோம்.
ஒருவர் இருவரல்ல 40க்கும் மேற்பட்டவர்களின் அனுபவங்களை சான்றுடன் எழுதிவைத்துள்ளார்.

சதுரகிரி யாத்திரைக்கு செல்லும்போது,அங்குள்ள மூலிகைகளால் நமது மனமும் உடலும் புத்துணர்வு பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பலவித நோய்கள் மூலிகையின் வாசத்தினாலே குணமாகிறது என்பது நாங்கள் கண்கண்ட காட்சியாகும்.

எமது 2வது அனுபவம்....
சதுரகிரி யாத்திரை முடித்துவிட்டு ,வீட்டுக்கு வந்து உறங்கிகொண்டு இருந்தேன்.அப்போது எங்கள் உறவினர் சேலத்தில் இருந்து
இருவர் என்னை பார்க்கவந்திருந்தனர். அவர்கள் மிகப்பெரிய வசதிபடைத்தவர்கள். எமக்கு சித்தி முறை அவர்கள்.
வீட்டுக்கும் வந்ததும் நன்கு உபசரித்தார்கள் ,எங்கள் வீடு விருந்தோம்பலுக்கு பெயர்போனதாகும்.

உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் அவர்களைப்பார்த்தேன் ,
அவர்களின் முகம் வாடியிருந்தது. என்ன விசயம் என்ற கேட்டேன். அதற்க்கு என் சித்தி,
எனக்கு கர்ப்ப பையில் பிரச்சனை இருக்க்கிறது என்பதால் எனக்கு வருகின்ற
வெள்ளிக்கிழமையன்று அறுவை சிகிச்சை செய்வதாக மருத்துவர் கூறிவிட்டார் என கூறினார்.
எல்லா டெஸ்ட்களும் பண்ணியாகிவிட்டது. கர்பபையை எடுப்பது தான் உடலுக்கு நல்லது என்று மருத்துவர் கூறியதாக என்னிடம் கூறினார்.  அதே நேரம் வீட்டில் சொத்து பிரச்சனை ஏற்பட்டு, கோர்ட்டில் வழக்கு நடப்பதாகவும் கூறினார்.

இருவரின் முகத்தினைப்பார்த்து மிகவும் வேதனையடைந்த நான் என்ன செய்தேன் என்று .

நாளைய பதிவில் காணலாம்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

14 கருத்துகள்:

  1. பாலா, தங்கள் அனுபவங்கள் அருமை. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. அன்பு பாலா,
    தாங்கள் எழுதி வரும் சித்தர்களின் ( உங்கள் ) முழக்கத்தை படித்துக் கொண்டுதான் வருகிறேன். அத் தொடரில் என்னை குறிப்பிட்டுள்ளதற்கு மிக்க நன்றி. என்னை சற்று மிகைப்படுத்தி விட்டதாகவே தோன்றுகிறது. தாங்கள் பெருமைப்படுத்திய அளவு எனக்கு அறுகதை கிடையாது. இயல்பாகவே சிறப்பு மிக்க ஆலயங்களுக்கு சென்று வந்தால் அக்கோயில் பிரசாதங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது இயல்புதானே! இதில் என்ன ஆச்சரியம்?
    சதுரகிரியில் அபிஷேகம் செய்த பஞ்சாமிருதம் கிடைப்பது சற்று அரிது.. உண்மை!. அந்த பாக்கியம் எனக்கு இருப்பது நான் செய்த புண்ணியம். உங்கள் மனைவியின் குறையை தாங்கள் சொல்ல, அதை கேட்டு நான் தங்கள் மனைவிக்கு பஞ்சாமிருதமும் சந்தனமும் கொடுத்தது என்னையும் மீரிய செயல். அது அவன் திருவிளையாடல். இதில் என் பங்கு ஒன்றும் இல்லை.அத்தருணத்தில் நான் மகாலிங்கத்தின் போஸ்ட்மேனாக மட்டுமே இருந்தேன். மற்றது எல்லாம் அவன் செயல்.
    தாங்கள் நோய்வாய் பட்டவர்களுக்கு திருநீர் பிரசாதம் அனுப்புவதாக சொல்லியுள்ளீர்கள், அத் தகவலை தொலைபேசியிலும் சொன்னீர்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் திருநீர் மருந்தாக மாறுவது ஈசனின் தயவு இருந்தால் மட்டுமே சாத்தியம். ஒருவரின் குறை தங்களால்தான் தீர வேண்டும் என்ற விதி இருந்தால் விளம்பரங்களும் அழைப்புகளும் இல்லாமலேயே அவர் தங்களை நாடி வருவார்... தங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களிடம் இருந்து பிரசாதம் பெற்றுச் செல்வார். இதற்கு உங்கள் மனைவியின் துன்பமும் சித்தியின் அவஸ்தையுமே சாட்சி.
    தாங்களாகவே எதற்கும் முன்வருவது வேண்டாம் என்பது என் கருத்து. உங்கள் ஆர்வம் பாரட்டுதலுக்கு உரியது. ஆனால்,அதுவே தங்களுக்கு ஆபத்தில் முடியாமல் பார்த்துக்கொள்ளவும். தங்களை தாமாகவே நாடி வருவோருக்கு இயன்றதை செய்யுங்கள் அதுவே ஈசனின் செயலாக விளங்கும்.
    தாங்கள் கேட்டுக் கொண்டதுபோல் பிரசாதங்களை அனுப்ப எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவை பிரசாதமாக அமைவதும் திருமருந்தாக அமைவதும் அவரவர் விதிப்பயன்.
    நல்லாசிகளுடன்.....

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஐயா ,

    தங்களின் கருத்துகள் என்றும் எல்லாருக்கும் நன்றாகவே அமையும் என்பதற்கு
    இந்த ஒரு விளக்கமே போதும். தங்களை நான் மிகைப்படுத்தி கூறவில்லை ,
    எமக்கு தெரிந்ததை தான் எழுதினேன்.

    தக்க சமயத்தில் தாங்கள் தடுத்தாட்மை கொண்டதுக்கு மிக்க நன்றி.

    " பிரசாதமாக அமைவதும் திருமருந்தாக அமைவதும் அவரவர் விதிப்பயன்".

    " திருநீர் மருந்தாக மாறுவது ஈசனின் தயவு இருந்தால் மட்டுமே சாத்தியம்".


    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  4. மிகச்சரியாக சொல்லி உள்ளீர்கள் நண்பரே, அவரவர்களின் நோக்கத்தை புரிந்துகொண்டு அருள்பவனே சிவன்

    முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், விதியையும் மற்றும் திறன் படைத்தவன் சிவன். மர்கேண்டேயன் வரலாறும் அருணகிரியாரின் வரலாறும் இந்தற்கு சான்றாக கூரலாம் .

    பதிலளிநீக்கு
  5. பாலா!
    என் விளக்கங்களை சரியாய புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. உன் வாழ்க்கையே ஒரு அனுபவ கையேடு. அன்றாடம் அதை புரட்டிப்போட்டுப் பார். அதில் படிப்பதற்கு எத்தனையோ பாடங்கள் உள்ளன. அவற்றை சரியாக புரிந்துக் கொண்டு நீ செயல்பட்டாலே நீ பலருக்கு உதாரண புருஷனாக விளங்கலாம். என்னை விட உன்னை அறிந்தவர்கள் மிக குறைவு ஆகவேதான் உறுதிபட கூறுகிறேன்..... நீ மஹாலிங்கத்தில் செல்லப் பிள்ளை. அந்த நிலையை தக்க வைத்துக் கொள்வதும் அதனால் அழிவதும் உன் கையில்தான் உள்ளது.
    ந்ல்லாசிகளுடன்,
    வெங்கடெஷ்.

    பதிலளிநீக்கு
  6. சேலம் வெங்கடேஷ் அவர்களுக்கு என் வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
  7. நிகழ்காலத்தில் ஐயா அவர்களுக்கு அனேக நமஸ்காரங்கள்!

    பதிலளிநீக்கு
  8. எங்களுடைய வழிக்காட்டி ஐயா வெங்கட் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வருகின்ற அமாவாசைக்கு அப்புறம்
    தேவைப்பட்டவர்களுக்கு அவரே அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்.
    :)

    Thanks: )
    pl. inform how to contact:)

    பதிலளிநீக்கு
  9. ஆனால் திருநீர் மருந்தாக மாறுவது ஈசனின் தயவு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
    yes

    ஒருவரின் குறை தங்களால்தான் தீர வேண்டும் என்ற விதி இருந்தால் விளம்பரங்களும் அழைப்புகளும் இல்லாமலேயே அவர் தங்களை நாடி வருவார்
    its wrong

    நீ மஹாலிங்கத்தில் செல்லப் பிள்ளை. அந்த நிலையை தக்க வைத்துக் கொள்வதும் அதனால் அழிவதும் உன் கையில்தான் உள்ளது
    The same am I to all beings; to Me there is none hateful or dear; but those who worship Me with devotion are in Me and I am also in them.

    பதிலளிநீக்கு
  10. Maalini அவர்களே!

    ஒருவரின் குறை தங்களால்தான் தீர வேண்டும் என்ற விதி இருந்தால் விளம்பரங்களும் அழைப்புகளும் இல்லாமலேயே அவர் தங்களை நாடி வருவார்
    its wrong
    I quite agree with you.It may be wrong. இருக்கலாம். நான் மஹான் அல்ல! என் அறிவிற்கும் அனுபவத்திற்கும் தெரிந்த கருத்தை கூறியுள்ளேன்.

    'அயமாத்மா பிரம்ம' - இந்த ஆத்மாவே பிரம்மம்!
    'தத்வமயி' - எதுவாக நினைக்கிறாயோ நான் அதுவாகவே இருக்கிறேன்!
    'அஹம் பிரம்மாஸ்மி' - நான் பிரம்மமாக இருக்கிறேன்!
    'அதிதி தேவோ பவ' - அனைத்தும் நானாகவே இருக்கிறேன்!

    நானே பிரம்மமாக இருக்கும்பொழுது கடவுள் என்பவர் எதற்கு? வாசகங்களை அவரவர் புரிந்து கொள்ளுதலில்தான் அதன் பொருள் இருக்கிறது. தெய்வத்தன்மை வேறு தெய்வீகத்தன்மை வேறு என்பது என் கருத்து.இதை தாங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்களோ தெரியாது.

    பதிலளிநீக்கு
  11. ஒருவரின் குறை தங்களால்தான் தீர வேண்டும் என்ற விதி இருந்தால் விளம்பரங்களும் அழைப்புகளும் இல்லாமலேயே அவர் தங்களை நாடி வருவார்
    ------//

    நானே சொல்லனும்னு இருந்தேன் . கோடிகணக்கில் ஆன்மீக பதிவில் இருந்தாலும் இந்த பதிவை படித்து சந்தன மகிமையை தெரிந்தவர் ஒரு சிலரே
    அப்படி தெரிந்து வேண்டும் என்பவர்களுக்கு கொடுக்கலாமே . என்பதுதான் . நேரில் வந்து கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே

    பதிலளிநீக்கு
  12. Sri Kamalakkanni Amman Temple அவர்களுக்கு,
    ஐயா! யாரையும் நேரில் வந்துதான் கேட்க வேண்டும் என்று எத்தருணத்திலும் நான் சொல்லவில்லை. நாடுவது என்பதன் விளக்கத்தை தாங்கள் இன்னும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. முதலில் அதை தெரிந்து கொண்டு விமர்சிப்பது நல்லது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம் ஐயா!
    நாடுவது என்று அடியேன் அறியவில்லை . மன்னிக்கவும் .
    நான் எப்படி சொல்வது என்றும் தெரியவில்லை
    எல்லாம் அவன் செயல் . இதற்க்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை
    thanks:)

    பதிலளிநீக்கு
  14. @venkat:
    could u please post the, star fall video which u took in sathuragiri, I am eagerly waiting to see that.

    Many thanks,
    Balaji
    balajipalamadai.blogspot.com

    பதிலளிநீக்கு