வெள்ளி, 11 மார்ச், 2011

ஆதி சித்தனின் இரண்டாம் வருகை ...

அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,

ஐயா சிவனருள் கேட்டதற்கிணங்க என்னுடைய அடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

என்னுடைய அடுத்த பிறந்தநாள் வந்தது. அந்த சமயம் ,நான் சென்னையில் பணி புரிந்துகொண்டு இருந்தேன்.
வழக்கம் போல் , திருவல்லிக்கேணியில் உள்ள திருவெட்டீசுவரர் கோவிலுக்கு சென்று வணங்கி வந்தேன். 
ஆதிசித்தன் கூறியதுபோல், இந்த பிறந்த நாளும் வருவாரா ? என மனம் ஏங்கியது.

வழக்கம்போல், தந்தையிடம் முடிந்தால் என்னை வந்து பாருங்கள் இன்று ,உங்கள் ஆசி  எனக்கு தேவை என்று முறையிட்டு வந்தேன்.
இருப்பினும் , இது சென்னை மாநகரம் அல்லவா , எப்படி வருவார் ,என மனதில் ஒரே குழப்பம் நீடித்தது.
எப்படியோ வந்தால் சரி. என்று நினைத்துகொண்டு அலுவலகத்திற்க்கு சென்றுவிட்டேன்.

அலுவலகத்தில் பணிபுரிய மனம் வரவில்லை, எப்படி அவர் வருவார் என மனதில் ஒரே ஏக்கம்.

மதிய உணவிற்க்காக ,நாங்கள் வெளியே சென்றோம், அப்போது எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார்.
அவர் சிவவழிப்பாட்டில் உள்ளவர், சரி அவரிடம் சென்று ஆசி வாங்கி வரலாம். என்று கிளம்பினேன்.

அவரின் கடைக்கு சென்று , அவரிடம் ஆசிப்பெற்றேன். ஆனால் என் மனதோ, ஆதி சித்தனை நோக்கி இருந்தது.

அப்பொழுது, ஒரு வயதான துறவி எங்கள் கடையை நோக்கி வந்து கொண்டு இருந்தார்,

எனக்கு ஒன்றும் புரியவில்லை , அவரின் தோற்றம், பழுத்த பழம்,முகத்தில் தேஜஸ் அதிகம், காவி உடை , மார்பில் துணி இல்லை.
உடல் முழுக்க ருத்ராட்சை, கையில் ஒரு பை மற்றும் திருவோடு வைத்திருந்தார்.

நாங்கள் இருந்த கடைக்குள் அவர் வந்தார். பிறகு என்னைப்பார்த்து , இன்று உன் பிறந்த நாள் தானே என கேட்டார்.
நான் பொத்தென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டென். பிறகு அவருக்கு, நான் வாங்கி வந்த இனிப்புகளை கொடுத்தேன்.

அவர் அதை வாங்கி கொண்டார். பின் அவர் பையிலிருந்து விபூதி மற்றும் ஐந்து வகையான இனிப்புகளை வழங்கினார்.
பிறகு வீட்டில் உள்ளவர்களை நலம் விசாரித்தார். பின் மகனே நான் இமயமலையில் உள்ள அமர்நாத்தில் இருந்து வருகிறேன்.
உனக்கு இந்த பிரசாதங்களை கொடுக்க சொல்லி எனக்கு உத்தரவு என்றார்.

அடுத்த முறை என்னைப்பார்க்க என்னிடத்திர்க்கு வா என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

என்ன உங்களால் நம்ப முடியவில்லையா ?

என்னுடைய அடுத்த பிறந்தநாளில் அவர் கூறியதுப்போல் நான் அமர்நாத் குகைக்கு சென்று அவரை வணங்கி ஆசிப்பெற்றென்.

சிவ அனுபவங்கள் தொடரும்.....
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

8 கருத்துகள்:

  1. பாலா, தாங்கள் பூர்வ ஜன்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்கிறீர்கள். அதனால் தான் இப்படிப்பட்ட உயர்ந்த ஆத்மாக்களின் தரிசனம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி.

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. நிங்கள் மகா பாக்கியசாலிதான் குப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறாரே. சென்னை மாநகரை பற்றி தெரியாத காலத்தில் திருவல்லிகேனிக்கு வந்து அவரின் இந்த ஆலயத்தை தேடி அலைந்து கடைசியில் தரிசிக்காமலே வந்துவிட்டேன். இன்று வரை அவரை தரிசிக்க முடியவில்லை.

    உண்மையிலேயே உங்கள் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பரே. எதையும் உடனே செய்வதில் சிக்கல் இருக்கும் ஆனால் அந்த சித்தர் சொன்னதுபோல உடனே அடுத்த பிறந்த நாளில் அமர்நாத் சென்ற நிங்கள் பாக்கியசாலிதான். எனக்கும் அந்த எண்ணம் உள்ளது அமர்நாத் ஆதி சிவனின் ஆலயம் அவனின் தரிசனம் கடிப்பாக தரிசிப்பேன் என்ற உறுதியோடு உள்ளேன். ௧௨ ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் என்பது என் சித்தம் அதை நிறைவேற்றுவது அவன் அருளாசி. ஆனால் ஒன்றை மற்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் அவரின் ஒவ்வொரு ஜோதிர்லிங்கச்தலமும் ஒவ்வொரு ஜோதியாக ஒரு புது அனுபவத்தையும் அவர் தரும் தரிசனமும் வியக்கத்தகவையாக உள்ளது. இதை பற்றி விரிவாக எழுத உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள சிவனருள் ஐயா,

    தங்களின் கொள்கை நன்று, ஆனால் அவனை தேடி எங்கும் போக வேண்டாம். உம்முடலில் இருக்கும் உத்தமனை பார்க்க முயற்சி செய்யுங்கள் .

    சிவன் சீவன் தான் என்பது சித்தர்களின் கருத்து. தாங்கள் இன்னும் வெளியே தேடி கொண்டு இருக்கிறிர்கள் .
    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  4. தாங்கள் சொல்வது சரிதான்

    ஆனாலும் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதற்கிணங்க ஏனோ அவனை அவனுடைய இடத்தில் காண்பதில் எனக்கு ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது.

    இன்னும் நான் அந்த நிலைய அடையவில்லை அது..... அது...... அதற்கேற்ற நேரத்தில் நடக்கும் என்றுள்ளேன் ஆட்டுவிப்பதும் அவனே ஆட்டத்தை நிருத்துபவனும் அவனே. விரைவில் காசி செல்ல உள்ளேன், ம்ம் எல்லாம் அவன் செயல்.



    ஐயா ஒன்றை சொன்னால் நம்ப மாட்டிர்கள்,

    அதல பதாலாம் அதற்குள் நடந்து செல்கிறேன், அங்கு ஒரு சிவலிங்கம் தரிசனம் செய்கிறேன், அடுத்த கணம் சிவலிங்கத்தின் மேல் ஒரு சிவனடியார் நீண்ட ஜடா முடியோடு என்னை நோக்கி அங்கு பார் என்கிறார் அங்கு பார்த்தால் தெரிந்தது என்ன தெரியுமா? ஜஸ்ட் வெளிச்சம் மகா வெளிச்சம் மீண்டும் திரும்பி பார்க்கிறேன் சிவளிஞ்கத்தின் மீது அமர்ந்திருந்தவர் சிரிதவரே மறைந்து போகிறார்.

    இது நடந்தது கனவில் நிஜத்தில் அல்ல. ஸூஸகமாக ஒரு உண்மையை எனக்கு உணர்த்தி விட்டறையா அந்த சிவா சித்தன். அது போதுமே எனக்கு.

    உங்களுக்கும் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    அன்புடன்
    சிவனருள் பதிவன்

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள சிவனருள் ஐயா,

    தாங்கள் கண்ட கனவின் சூட்சமம் யாம் அறிவோமே,

    காசி சென்று வர வாழ்த்துகள், நீங்கள் கனவில் கண்டதை போல் நான் கும்பகிரியில்

    குருமுனியின் தரிசனம் கண்டேன் . நம்ப முடியாத சித்தர்களின் யாகம்,அவர்களின் பேச்சு இன்றும் என் நினைவில் நீங்காத இடம் பெற்று இருக்கிறது .

    கும்பகிரி அனுபவத்தை முடிந்த வரை பகிர்ந்த கொள்ள முயற்சிக்கிறேன்.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் நண்பா,
    "செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"
    தங்களின் இந்த சமீபகால பகிர்வுகள்,சித்தர்கள் வழிப்பாட்டில் உள்ளவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?.
    தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்....
    நன்றி...
    என்றும் நட்புடன்
    chakra....
    http://shivasiddhargal.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள நண்பா ,

    சித்தர் வழிப்பாட்டில் உள்ளவர்கள் எல்லாரும் ,சரியை , கிரியை,யோக நிலையை தாண்டி தான் ஞான நிலைக்கு வரமுடியும்.

    அவனின்றி அவன்தாழ் வணங்கமுடியாது- அதுப்போல் காலம் கனியும் வரை பொறுத்திருக்கவேண்டும். சித்தர் வழிப்பாட்டில் உள்ளவர்கள் எல்லாம் தம்முடைய உடலிலே அனைத்துவகையான ஜோதிகளையும்,நதிகளையும் கண்டு களிப்பார்கள்.

    "அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை "

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    பதிலளிநீக்கு
  8. அருமை! மகிழ்ச்சியான அனுபவம்.

    சிவசித்த அருள்பெற்ற சிவனருளாளரே
    சீவனை அகத்தியமாய்க் கண்டமகரே
    கவசித்த ஜெபமியற்றி அருள்பெற்றோரே
    கணத்தில் சிவமுணர்ந்த பெருஞ்சுடரே
    தவசித்த வாழ்வில் நன்னெறி யியற்றி
    தரணியில் சிவபாலனாய் வாழ்வீரே!

    அன்புடன்
    சந்திரசேகர்

    பதிலளிநீக்கு