வியாழன், 10 மார்ச், 2011

ஆதி சித்தனை வழியனுப்புதல்.

நேற்றைய தொடர்ச்சி ,

வீட்டில் இருந்து விடைப்பெற்றுக்கொண்டு , அவரை வழியனுப்ப வந்தபோது ,
பேருந்து வருவதற்கு பத்து நிமிடம் இருந்தது . அந்த நேரம் இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தோம் , அப்போது அவர் எனக்கு தினந்தோறும் ஒரு தமிழ் அர்ச்சனை செய்வாயே , எங்கே சொல் என்று என கேட்டார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம். இருப்பினும், கிடைத்த வாய்ப்பை ஏன் நழுவவிடவேனும் என்று , உடனே ,படபடவென அந்த அர்ச்சனையை ஆரம்பித்தேன். கொஞ்சம் நேரத்தில் அவரின் உடல் அதிர ஆரம்பித்தது . 
அவரின் கண்கள் மேல் நோக்கி சென்றுவிட்டது. சாம்பவி முத்திரையை போல் ,அவரின் கண்கள் நெருப்பு கலராக  இருந்தது.  

ஆனால் நானோ , மந்திரத்தின் எண்ணிக்கையில் கண்ணும் கருத்துமாக இருந்தேன், சிறிது நேரத்தில் எனக்கு மந்திரம் எதுவும் சொல்ல முடியவில்லை,இருப்பினும் விடா முயற்சியாக எல்லா மந்திரத்தையும் சொல்லி முடித்தேன்.  எனக்கு ஒரே சந்தோசம் அவரிடம் எல்லா மந்திரத்தையும் ஒப்பித்துவிட்டேன்.

பிறகு என்னை நோக்கி கூறினார், மகனே மந்திரம் என்பது மனதினால் சொல்வது  எண்ணிக்கைக்காக அல்ல,  இன்னும் பக்குவ பட வேண்டியிருக்கிறது என்று கூறினார். பின் எந்த மொழியாக இருந்தாலும் எவன் முழுமனதுடன்  அவனை உச்சரிகின்றானோ அவனுடைய குறிக்கோள் நிறைவேறும் என்று கூறினார்.

உன்னை அடுத்த முறை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டார் ,
சித்தன் கூறியபடி எனக்கு வேலை கிடைத்தது . வாழ்வும் சிறந்தது.

என்ன சித்த உள்ளங்களே , நம்ப முடியவில்லையா , அவனின் அடுத்த சந்திப்பு 
என்னுடைய அடுத்த பிறந்த நாளில் சென்னை மாநகரத்தில் நடைப்பெற்றது .

அதை முடிந்தால் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

1 கருத்து:

  1. அந்த சித்த புருஷர் வந்ததிலிருந்தே தங்கள் மெய் மறந்து இருந்துவிட்டிர்கள் என்றே சொல்லலாம் அல்லவா?
    ஏனென்றால் உங்களிடம் பெரிய மாற்றம் அந்த நேரத்தில் இருந்ததா?

    மெய் மறந்து இருக்கும்போது மெய்யாகவே எதிரில் இருந்தாலும் அது மெய் போல் தெரிவதில்லையே
    இது சரிதானா இல்லையா என்று நிங்கள் தான் சொல்ல வேண்டும்.
    விரைவில் உங்களின் அந்த சென்னை சந்திப்பையும் அவனருளால் பகிரவும்.
    அன்புடன்

    பதிலளிநீக்கு